ETV Bharat / state

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன்!

author img

By

Published : Jun 28, 2021, 9:00 PM IST

ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுப்படுத்திய திமுக எம்எல்ஏ சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன்
எல்.முருகன்

சென்னை: சட்டசபையில் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற தேசபக்த முழக்கங்களை பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் தொடர்ந்து எழுப்புவார்கள் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியதாவது, “ஆளுநர் உரையை படித்தவுடனேயே தமிழ்நாடு தலை நிமிர்ந்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே நன்றி வணக்கம், ஜெய்ஹிந்த் போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் என்று திருச்செங்கோடு தொகுதி திமுக எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேசி “ஜெய்ஹிந்த்” என்ற தேச உணர்வு மந்திரத்தை இழிவுப்படுத்தி உள்ளார்.

அதாவது ஜெய்ஹிந்து என்று குறிப்பிடாததால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது என்று கூறி கொண்டாடி உள்ளனர். திமுக எம்எல்ஏ, ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுப்படுத்தியதை, அப்போது அவையில் இருந்த முத்லமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளம் மகிழ்ந்து உள்ளார். திமுக எம்எல்ஏவின் இந்த செயலை ஒப்புக்குக் கூட இதுவரை கண்டிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொந்தளித்து போய் உள்ளார்கள்.

தேச துரோக செயல்களை ஊக்குவிப்பதிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்துவதிலும், இந்து கடவுள்களை இழிப்படுத்துவதிலும், இந்து மத வழிப்பாட்டு முறைகளை இழிவுப்படுத்துவதிலும் திமுக தொடர்ந்து ஆதரவை நல்கி வருகிறது.

பிரிவினையை தூண்டும் வகையில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று தொடங்கினார்கள். இதன் மூலம் பிரிவினைவாத, தேசதுரோக, தனித்தமிழ்நாடு, திராவிடநாடு போன்ற உளுத்துப்போன சித்தாந்தத்திற்கு புத்துயிர் கொடுக்க முயல்கின்றனர். அந்த வரிசையில் இப்போது ஜெய்ஹிந்த் இழிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஹிந்த் ஒரு மந்திரச்சொல்

ஜெய்ஹிந்த் என்ற மாபெரும் மந்திரச் சொல்லை இந்தியாவுக்கு வழங்கியது ஒரு தமிழன். செண்பகராமன் பிள்ளை என்ற பச்சை தமிழன் தான் முதன்முதலில் ஜெய்ஹிந்த் என்ற உணர்ச்சிப் பிழம்பு கோஷத்தை உச்சரித்தார். அந்த கோஷத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் எழுப்பி பின்னர் அது இந்திய தேசிய இராணுவத்தின் கோஷமாகப்பட்டது. அதன் பிறகு சுதந்திர போராட்டத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உச்சரிக்காத வீரர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

சுதந்திர போராட்ட காலத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கேட்டால் வெள்ளையர்கள் பதறினார்கள். ஆனால் இப்போது ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கேட்டால், கொள்ளையர்களும், தேசத்துரோகிகளும், பிரிவினைவாத சக்திகளும் பதறுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மந்திரசொல் ஜெய்ஹிந்த்.

ஒவ்வொரு ராணுவவீரனின் ரத்தத்திலும் ஊறிப்போன கோஷம் ஜெய்ஹிந்த். இந்த தேசத்தை தெய்வமாக நேசிக்கின்ற ஒவ்வொரு தேசபக்தனின் ஆன்மாவிலும் உறைந்து போன கோஷம் ஜெய்ஹிந்த். அப்படிப்பட்ட புனிதமான மந்திர சொல்லை இழிவுப்படுத்தியது மட்டுமல்லாமல், திமுக எம்எல்ஏ அதனை நியாயப்படுத்தியும் வருகிறார்.

வாஞ்சிநாதனை அவமானம் செய்த திமுக

அப்பழுக்கற்ற சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுப்படுத்துபவர்களுக்கு துணை போவது திமுகவிற்கு புதிதல்ல. கடந்த ஜூன் 17ஆம் தேதி சுதந்திர போராட்ட மாவீரன், வாஞ்சிநாதனின் தியாகத்திருநாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரோ, அல்லது ஏதாவது ஒரு அமைச்சரோ அந்த மாவீரனின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. அவரது திருவுருவ படத்திற்கு கூட முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது திமுக அமைச்சர்களோ மலர்தூவி மரியாதை செலுத்த முன் வரவில்லை.

ஆனால் மாவீரன் வாஞ்சிநாதனை இழிவுப்படுத்திய தேசத்துரோக கும்பல்களுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. திராவிட தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக சுதந்திர போராட்ட மாவீரன் வாஞ்சிநாதனை இழிவுப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு திமுக ஆதரவளித்து வருகிறது.

மற்றொரு புறம், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்ற உன்னதமான சுதந்தி போராட்ட வீரர்களை சிறையில் அடைத்து, பல்வேறு சித்தரவதைகளையும், கொடுமைகளையும் நிறைவேற்றிய வெள்ளைக்கார கலெக்டர் ஆஷை கொண்டாடி மகிழ்கின்றனர்.

முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்

சுதந்திர போராட்ட வீர்ர்களை இழிவுப்படுத்தும் நபர்களுக்கு, திமுக தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் அந்த தேசத்துரோக கும்பல்கள் ஊக்கம் பெற்று, சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுப்படுத்துவதை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றது. அந்த வரிசையில் தான் இப்போது ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை இழிவுப்படுத்தி, அதன் மூலம் ஒட்டு மொத்த சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் கொச்சைப்படுத்தி உள்ளார்கள். திமுகவின் இந்த இழிசெயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுப்படுத்திய, திமுக எம்எல்ஏ சார்பில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருகின்ற காலங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற தேசபக்த முழக்கங்களை தொடர்ந்து எழுப்புவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊரக வேலைத் திட்டம்... ஏழைகளுக்கு 150 நாள்கள் பணி வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.