ETV Bharat / state

”மனு தர்மத்தை எதிர்த்து திருமா அறிவாலயத்தில்தான் போராட வேண்டும்” - வானதி சீனிவாசன் தாக்கு!

சென்னை : மனு தர்மததை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் திருமாவளவன் அறிவாலயத்தில்தான் போராட வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மனு தர்மத்தை எதிர்த்து திருமா அறிவாலயத்தில்தான் போராட வேண்டும் -வானதி சீனிவாசன் தாக்கு!

author img

By

Published : Nov 3, 2020, 12:53 AM IST

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள வானதி சீனிவாசனுக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன், துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன், "தேசிய அளவில் ஒரு பொறுப்பை பாஜக சார்பாக வழங்கி உள்ளனர். இதனை மிகப் பெரிய பொறுப்பாக நான் உணர்கிறேன். இந்தியாவில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு வழங்கக்கூடிய ஒரே கட்சி பாஜக தான். சாதாரண பெண்ணுக்கு அரசியல் என்பது கனவு. அந்த வகையில் ஒரு நடுத்தர பெண்ணான எனக்கு தேசிய அளவில் வாய்ப்பு வழங்கி உள்ளனர்” என்றார்.

மேலும், மனு தர்மம் குறித்து திருமாவளவன் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர், "மனு தர்மம் பிறப்பின் அடிப்படையில் ஒருவருக்கு முக்கியத்துவம் வழங்குவதாக திருமா கூறுகிறார். பாஜகவில் பிறப்பின் அடிப்படையில் யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக போராட வேண்டும் என்றால் திருமாவளவன் அறிவாலயத்தில்தான் போராட வேண்டும். அங்குதான் பிறப்பின் அடிப்படையில் இளைஞர் அணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது" என்றார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

அது மட்டுமின்றி பாஜகவில் குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு பதவி வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், "பாஜகவில் ஓரிரு நபர்கள்தான் குற்றவாளிகளாக இருக்கிறார்கள், ஆனால் மற்ற கட்சியில் குற்றவாளிகளே தலைவராக இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...“பிகாரில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்”- சுதேஷ் வர்மா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.