சென்னை: நங்கநல்லூர் பி.வி.நகர்ப்பகுதியில் பவன்குமார்(25) என்பவர் வசித்துவருகிறார். இவர் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் என்பவரிடம் இந்தி மொழி பெயர்ப்பு அலுவலராகப் பணியாற்றி வருகிறார். மேலும், பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச்செயலாளராக உள்ளார்.
பவன்குமாரின் வீட்டின் மேல் தளத்தில் அவரின் சகோதரி ரிங்கி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையைச்சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிங்கி உடன், பேயிங் கெஸ்ட்டாக தங்கி உள்ளார்.
![பவன்குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-arrest-photo-script-7208368_26042022091410_2604f_1650944650_573.jpg)
இந்த நிலையில் இன்று பவன்குமார் வீட்டின் மேல் தளத்திற்குச் சென்றபோது, வீட்டில் குப்பை இருந்ததால் அந்த 27 வயது பெண்ணை, வீட்டை ஒழுங்காகச் சுத்தம் செய்ய மாட்டியா என மிரட்டி துணியைக்கிழித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார்.
![வீட்டில் குடியிருக்கும் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த பவன்குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-arrest-photo-script-7208368_26042022091410_2604f_1650944650_811.jpg)
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பவன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிசிஐடி அதிகாரி நியமனம்!