தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் சென்னை கீழ்பாக்கம் தொகுதியில் தனது வாக்கினை அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 20 நாள்களாக உங்கள் அனைவரையும் பிரிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்த வாக்குச்சாவடியில் முதல் ஆளாக நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன்.
![BJP chances of victory are bright said bjp state leader L. Murugan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-bjp-murugan-byte-script-photo-7209655_06042021085552_0604f_1617679552_937.jpg)
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் இந்த வாக்குச்சாவடியில் முறையாகப் பின்பற்றப்படுகிறது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டு இந்தப் பகுதிகள் அனைத்தும் சுத்தமாக வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்தமுறை பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.
![BJP chances of victory are bright said bjp state leader L. Murugan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-bjp-murugan-byte-script-photo-7209655_06042021085552_0604f_1617679552_903.jpg)