சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (பிப்.04) கடைசி தேதி என்பதால், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டினர்.
இந்நிலையில் பாஜக சார்பாக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துவரும் நிலையில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் 162ஆவது வார்டில் போட்டியிடுவதற்கு வினோத் குமார் என்னும் வேட்பாளர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டார்.
வினோத் குமாருக்கு இன்று (பிப்.04) காலை திருவாலங்காடு கோயிலில் திருமணம் நடைபெற்றது. அங்கிருந்து மணமகள் ராஜேஸ்வரியுடன் மணக்கோலத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார், வினோத் குமார்.
இந்த தேர்தலில் தான் வெற்றி பெறுவேன் என்றும், எனக்கு சிறப்பான நாள் என்பதனால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'சமூக வலைதள கணக்குகளில்கூட என்னைத்தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்; விரைவில் நிவர்த்தி செய்வேன்'