பொதுவாக விடுமுறை நாள்களில்தான் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம் . ஆனால் கரோனா காரணமாக நீண்ட நாள்களாக கோயில்கள் திறக்கப்படாமல் இருந்தன. பின்னர் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் பேருந்து, ரயில் போக்குவரத்து, சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள், மிகப் பெரிய மால்கள், விமான போக்குவரத்து என அனைத்தும் இயங்குகின்றன. தனியார், அரசு நிறுவனங்கள் இயங்குகின்றன. தொழிற்சாலைகள் இயங்குகின்றன. கல்லூரிகள், பள்ளிகள் திறக்க பட்டிருக்கின்றன.
வரும் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளும் திறக்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இங்கு எந்தவித பணிகளுக்கும் தடையோ, இடையூறோ இல்லை.
அதேசமயம் கோயில்களையும், சர்ச்சுகளையும், மசூதிகளையும் மட்டும் மூடிவைத்து பக்தர்களுடைய வழிபாட்டிற்கு இடையூறாக தமிழ்நாடு அரசு நிற்பது ஆச்சரியமளிக்கிறது. மக்கள் வழிபாட்டிற்காக மட்டுமல்ல பூ, பழம் விற்கும் பெண்கள், பூஜை பொருள்களை விற்கும் வணிகர்கள், அவை சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், வணிகர்கள் என லட்சக்கணக்கான பேர் வருவாயின்றி வேதனையில் துவண்டு போய் செய்வதறியாது தவித்து நிற்கிறார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்து கோயில்களையும் திறக்குமாறு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு முன்பாக நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.
அதேபோன்று திருவண்ணாமலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சி.கே.சரஸ்வதி, ராமேஸ்வரத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, பழனியில் முன்னாள் மாநிலத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை கோனியம்மன் கோயிலில் சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், பொதுச் செயலாளர் ஜி கே.செல்வகுமார், நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோயிலில் சட்டப்பேரவை மாநில உறுப்பினர் எம் ஆர் காந்தி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் துனைத்தலைவர் வி.பி. துரைசாமி, முன்னாள் M.P K.P. ராமலிங்கம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொதுச் செயலாளர் கரு நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை கவுதமி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், சிதம்பரம் நடராஜர் கோயில் தடா பெரியசாமி, A G சம்பத் என முக்கிய தலைவர்கள் ஆங்காங்கே தலைமை ஏற்று இந்த கவனயஈர்ப்பு போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் லட்சக் கணக்கான தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பொதுமக்களும் பெருமளவில் இன் நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு மக்களுக்காக நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு மக்களுடைய இதயக் குரலை பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு தெரிவிக்கக்கூடிய ஆர்ப்பாட்டம் தான் இந்த ஆர்ப்பாட்டம் . இதைத்தொடர்ந்து கிறிஸ்துவ தேவாலயங்கள் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் அருகே பா ஜ க வின் சிறுபான்மையினர் அணி தலைவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் . தமிழ்நாடு ஆன்மிகப் பெருமக்கள் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பேராதரவு நல்கிட வேண்டுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து நாள்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி பாஜக அக்டோபர் 7ஆம் தேதி போராட்டம் நடத்துகிறது.
இதையும் படிங்க: கோயில்கள் திறக்க அனுமதியளிக்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்