சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர், சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், ’ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 3 ரூபாய் உயர்த்திக்கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி. ஆவின் நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் பரப்பி பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பால் விலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தமிழ்நாடு பாஜக தலைமை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அரசியல் செய்ய வேண்டாம்.
பால் முகவர் சங்கத்தின் தலைவர் என்று கூறிக்கொள்ளும் கட்டிங் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்திற்கு ஏஜெண்டும் இல்லை, உற்பத்தியாளரும் இல்லை - விலை உயர்வை கடுமையாக சாடிய அவர்தான், ஆவின் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்' என்று தெரிவித்தார்.
கரோனா காலத்திலும் ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், உற்பத்தியாளர்களை கொண்ட லாப நோக்கம் உள்ள நிறுவனமாக ஆவின் செயல்படுவதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கிராமம் தோறும் டிரோன் பைலட்டுகள் - முதல்வர் துவக்கி வைத்த அதிரடி திட்டம்