ETV Bharat / state

டிக்கெட் விலையை குறைத்தால் சிறப்பு காட்சி கன்பார்ம் -கடம்பூர் ராஜூ - டிக்கெட் விலை குறைப்பு

சென்னை: அரசு விதிக்கும் நிபந்தனையை ஏற்றால் தீபாவளிக்கு வெளியாகும் 'பிகில்' உள்ளிட்ட படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

bigil
author img

By

Published : Oct 22, 2019, 10:13 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,

"தீபாவளிக்கு முன்பே ஆன்-லைன் டிக்கெட் விற்பனை முறையை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். தீபாவளிக்கு வெளியாகும் 'பிகில்' உள்ளிட்ட படங்களின் சிறப்புக் காட்சிக்கு, அரசு அனுமதிக்காத நிலையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் 4 மணி, 8 மணி என சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள், நடிகர்களின் ரசிகர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், அதிக கட்டணம் பெறுவதை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு ஆன்-லைனில் டிக்கெட் விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அரசு அறிக்கை வெளியிட்டதும் திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகிஸ்தர்கள் சந்திப்பதாக கூறியுள்ளனர். சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கினாலும் எத்தனை மணிக்கு வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிப்போம்.

அரசு அனுமதிக்காத நிலையில் சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்புக் காட்சி குறித்து விவாதிக்கப்படும்

திரைப்பட வினியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த சந்திப்புக்கு பின் நல்ல முடிவு வரும். அரசு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் தான் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளியன்று வெளியாகும் படங்களுக்கு சிறப்பு காட்சி கிடையாது - கடம்பூர் ராஜு

Intro:திரையரங்கில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அரசு நிபந்தனையை ஏற்றால் தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி:-
Body:திரையரங்கில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அரசு நிபந்தனையை ஏற்றால் தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி:-

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

பண்டிக்கை காலங்களில் மட்டுமில்லாமல் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் காலங்களில் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு தொடர்ந்து வருகின்றன. இதை கட்டுபடுத்த ஆன்-லைனில் டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும் என்று 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்
ஆனால் உடனடியாக நடைமுறை செய்ய கூடிய காரியமில்லை என்று கூறினார். தீபாவளிக்கு முன்னதாக ஆன்-லைன் டிக்கெட் விற்பனை செய்து நடைமுறைப் படுத்த முடியாத காரியம். தீபாவளியின் போது கட்டண கொள்கையை கட்டுபடுத்த அதிக பேருந்துகளை இயக்கி தனியார் பேருந்துகள் அதிகமான கட்டணத்தை பெற முடியாத நிலையை உருவாக்கி உள்ளது. தீபாவளிக்கு எந்தவொரு படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்காத நிலையில் சென்னை உள்பட பல நகரங்களில் ஆன்-லைனில் சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விற்கப்படுவதாக தகவல்கள் வந்து உள்ளன. அரசு அனுமதிக்காத நிலையில் 4 மணி, 8 மணி என சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விற்பதை அரசு அனுமதிக்காது. இது பற்றி பொதுமக்கள், நடிகர்களின் ரசிகர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அதிக கட்டணம் பெறுவதை கட்டுபடுத்த தான் அரசு ஆன்-லைன் விற்பனை செய்ய சொல்லி வருகிறோம். ஆன்-லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதன் முலம் அதிக கட்டணத்தை கட்டுபடுத்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். அரசு அறிக்கை வெளியீட்டதும் திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகிஸ்தர்கள் சந்திப்பதாக கூறியுள்ளனர். சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கினாலும் எத்தனை மணிக்கு வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிப்போம். அரசு அனுமதிக்காத நிலையில் சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விற்று இருந்தால் ரத்து செய்ய வேண்டும். அதை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரைப்பட வினியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த சந்திப்புக்கு பின் நல்ல முடிவு வரும். அரசு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் தான் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்கப்படும். கட்டணங்கள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.