ETV Bharat / state

பிக்பாஸ் சீசன் 5: பங்கேற்கப்போகும் 16 போட்டியாளர்கள் இவர்கள்தாம்? - சென்னை மாவட்ட செய்திகள்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் 16 போட்டியாளர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.

author img

By

Published : Sep 30, 2021, 3:31 PM IST

Updated : Sep 30, 2021, 3:44 PM IST

சென்னை: இந்தியாவில் முதன் முதலில் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் தொடங்கப்பட்டது. தமிழில் 2017ஆம் ஆண்டுமுதல் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

பிக்பாஸ் போட்டியாளர்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதிமுதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்க உள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர்

போட்டியாளர்கள் குறித்த தகவல் நிகழ்ச்சி தொடங்க இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்துள்ளது நிகழ்ச்சி குழு. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் வெளியான வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்

அதில் சூப்பர் சிங்கர் சீசன் 7இல் பங்கேற்ற பாடகர் சாம் விஷால், சீரியல் நடிகை பாவனி ரெட்டி, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் போட்டியாளர்

மேலும் பிரபல மாடலும் நடிகருமான கோபிநாத் ரவி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கேற்ற சுனிதா, மலேசிய மாடல் அழகியான நதியா சங், பிரபல நடிகரான மன்சூர் அலிகான் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் போட்டியாளர்

டிக்டாக் பிரபலமும் நடிகையுமான காயத்ரி ஷான், கடந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக வருவார் எனக் கூறப்பட்ட பிரபல சீரியல் நடிகர் அஸீம் கான், மைனா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சூசன், நடிகர் இமான் அண்ணாச்சி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் போட்டியாளர்

இதேபோல் நடிகை பிரதனி ஷர்வா, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, நடிகை பிரியா ராமன், சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகர் ஆகியோரது படங்களும் பிக்பாஸ் சிஜி போட்டோவில் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் போட்டியாளர்

ஆனால் பிக்பாஸில் பங்கேற்கிறார் எனக் கூறப்பட்ட நடிகை ஷாலு ஷம்முவின் புகைப்படம் இதில் இடம்பெறவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் உண்மையிலேயே இந்தப் போட்டியாளர்கள் செல்வார்களா என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குத் தெரிந்துவிடும்.

பிக்பாஸ் போட்டியாளர்

இதையும் படிங்க: பூமியில் உலவும் தேவ லோக ஊர்வசி

Last Updated : Sep 30, 2021, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.