ETV Bharat / state

விரிவுரையாளர்களின் மகப்பேறு விடுமுறையை ரத்து செய்த பாரதிதாசன் பல்கலைக்கழகம்! - பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர்களின் மகப்பேறு விடுமுறையை ரத்து செய்த பாரதிதாசன் பல்கலைக்கழகம்..!

author img

By

Published : Sep 2, 2022, 5:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மகளிராக இருக்கினறனர். யுஜிசி தகுதி வகுத்துள்ள உரிய கல்வித்தகுதியுடன் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பிற கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 6வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தை உயர் கல்வித்துறை வழங்கிவருகிறது.

மேலும், 11 மாதச்சம்பளம் பெறும் மகளிர் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசாணை எண் 91இன் படி மகப்பேறு விடுமுறை அளிக்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பத்து உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரியாக மாற்றம்செய்யப்பட்டன.

இங்கு பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏற்கெனவே 12 மாதங்கள் ஊதியம் வழங்கப்பட்டிருந்தது. அரசுடைமையாக்கப்பட்ட பிறகு 11 மாதங்கள் மட்டுமே உயர் கல்வித்துறையின் பரிந்துரையின்பேரில் சம்பந்தப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகமே ஊதியத்தை வழங்கி வருகிறது.

எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்திற்கு, தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த தேசிய மகளிர் ஆணையம், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளருக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டது. இந்த மனுவிற்கு கடந்த 13.8.22 அன்று அனுப்பிய பதில் கடிதத்தில் , ''பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 10 உறுப்புக்கல்லூரிகள் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டதனால் மகப்பேறு விடுமுறை வழங்கும் அதிகாரம் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு இல்லை.

மகளிர் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்க இயலாமல் தொடர்ந்து மறுத்து வரக் காரணம் தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 11 மாதம் மட்டுமே ஊதியம் பெறுகிறார்கள். 12 மாதம் ஊதியம் பெறும் மகளிர் தற்காலிகப்பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்க இயலும்'' எனப்பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ''தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களும் 12 மாதம் ஊதியம் கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். அடிப்படை உரிமைகளை பெற்றுவிடுவார்களோ என எண்ணி தமிழ்நாடு உயர் கல்வித்துறை திட்டமிட்டு அரசாணை 91 வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தற்காலிக மகளிர் பணியாளருக்கு எதிராக உள்ள அரசாணை 91ஐ ரத்து செய்ய வேண்டும்'' என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.