ETV Bharat / state

'கும்குவாட்' பழம்பற்றித் தெரியுமா? பல உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.! - சீறுநீரக பிரச்சனைக்கு தீர்வு

Health Benefits of kumquat fruit in tamil: கும்குவாட் பழத்தின் ஊட்டச்சத்து மற்றும் கும்குவாட் பழங்களை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

கும்குவாட் பழத்தின் நன்மைகள்
கும்குவாட் பழம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 3:47 PM IST

Updated : Oct 7, 2023, 4:07 PM IST

சென்னை: 'கும்குவாட்' இந்த பழத்தைச் சாதாரணமாகக் கேட்டிருக்கவோ அல்லது பார்த்திருக்கவோ மாட்டோம். ஆனால் நூற்றாண்டுகளாக இந்தியா, ஜப்பான், தைவான், பிலிபைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த பழம் பயிரிடப்படுகிறது. எழுமிச்சைப் பழம் நீள் வடிவத்தில் இருந்து ஆரஞ்சு பழத்தின் நிறம் கொண்டிருக்கும் வகையில் இருந்தால் அது 'கும்குவாட்' பழம். இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையும் கலந்ததுபோல் இருக்கும் இந்த பழத்தைத் தோலுடன் அப்படியே சாப்பிடலாம். பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த பழம் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

கும்குவாட் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்;

  • வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், தாமிரம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளன.
  • அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது.
  • பழத்தின் விதைகள் மற்றும் தோலில் சிறிதளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
  • அதிகப்படியான நீர்ச்சத்தும் உள்ளது.
  • கும்குவாட் பழங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 13 கலோரிகள் உள்ளன.

கும்குவாட் பழத்தின் நன்மைகள்;

  • உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றவும், ரத்ததில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
  • சிறுநீரகச் செயல்பாட்டை சீராக வைக்கிறது.
  • ​​புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
  • புற்றுநோய் செல்கள் மற்றும் வைரஸ்களால் பாதிக்கப்பட்ட பிற செல்களை அகற்ற உதவுகிறது.
  • கும்குவாட் பழம் உடலுக்கு எந்த வகையில் பலன் தரும்;

ஆக்ஸிஜனேற்றம்: பழத்தின் தோலில் சதையை விட அதிக ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவற்றின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருதய நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கும்குவாட்ஸில் உள்ள பைட்டோஸ்டெரால்கள் கொலஸ்ட்ராலுக்கு மிகவும் பயனளிக்கிறது

நோயெதிர்ப்பு செயல்பாட்டை பலப்படுத்துகிறது: இந்த பழம் சளி, இருமல் மற்றும் சுவாச மண்டலத்தின் பிற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

உடல் எடையை நிர்வகிக்கிறது: கும்குவாட்டில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்கள் உடல் பருமனை எதிர்த்துப் போராடவும் இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வைட்டமின் ஏ ரோடாப்சின் உற்பத்திக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்தாகும். இது குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் பார்ப்பதை ஆதரிக்கும் ஒரு புரத கலவை ஆகும். எனவே இவை ஆரோக்கியமான பார்வையை ஆதரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

கும்குவாட் பழத்தின் விளைவுகள்:

பொதுவாக விதைகள் மற்றும் தோலுடன் உண்ணக்கூடிய முழுப் பழமும் பெரும்பாலான ஆரோக்கியமானவை. இருப்பினும், சிட்ரஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த பழத்தை அதிக அளவில் உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

  • வாய் பகுதி, உதடுகள் மற்றும் நாக்கில் அரிப்பு
  • தோல் சிவத்தல்
  • உலர்ந்த சருமம்
  • வீக்கம்
  • எரிவது போன்ற உணர்வு
  • படை நோய்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்

கும்குவாட் லெமன் டீ:

  • கும்குவாட் லெமன் டீ இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பை நீக்குவதற்கு உதவுகிறது.
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
  • இருமலைக் சரிசெய்வதற்கும், சளியைக் கரைப்பதற்கும் பயன்படுகிறது
  • கும்குவாட் தோலில் உள்ள வைட்டமின் சி கல்லீரல் நச்சு நீக்கம், கண் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

கும்குவாட் பழத்திலிருந்து, கும்குவாட் தேநீர், கும்குவாட் கேக், அதிமதுரம் கும்குவாட் கேக், கும்குவாட் ஜாம் மற்றும் கும்குவாட் ஜூஸ் போன்ற பல்வேறு சுவையான உணவுகள் செய்யலாம். மேலும், பழத்தின் தோலிலிருந்து நறுமண எண்ணெய்கள் தயாரிக்கபடுகின்றன.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கணுமா? முதல்ல இந்த 5 வகையான டீயை குடிங்க!

Last Updated : Oct 7, 2023, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.