ETV Bharat / state

ரப்பர் குடோனில் தீ விபத்து - பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

இந்த தீ விபத்தால் குடோனில் இருந்த ரப்பர் பெல்ட் மற்றும் பேரிங் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

tn_che_01b_belt_gudown_fire_vis_script_tn10021

author img

By

Published : Jul 3, 2021, 1:55 AM IST

Updated : Jul 3, 2021, 6:50 AM IST

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில், ரப்பர் பெல்ட் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் எந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் பெல்ட் குடோன் உள்ளது. இதன் உரிமையாளர் சேது (53). இவர், ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 2) மாலை சேதுவின் குடோனில் கரும்புகை வெளியேறியது. பின்னர், ரப்பர் பெல்ட் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த ஊழியர்கள், ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

இதனையடுத்து, அங்கு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜெ.ஜெ. நகர் ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தனர். இதன் பிறகு, அங்கு 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.

மேலும், அங்கு 5-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் கொண்டு வரப்பட்டன. பின்னர், 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் குடோனில் இருந்த ரப்பர் பெல்ட் மற்றும் பேரிங் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தீ விபத்திற்கு மின்கசிவு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் மண்ணூர்பேட்டை சுற்றியுள்ள குடியிருப்புகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் சிறுவர்கள், முதியோர், நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சம்பவ இடத்தை அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

ரப்பர் குடோனில் தீ விபத்து

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

Last Updated : Jul 3, 2021, 6:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.