ETV Bharat / state

'நேர்மையாக இருப்பதென்பது அவ்வளவு எளிதல்ல' - டிஜிபி சைலேந்திர பாபு - நேர்மையாக இருப்பதென்பது அவ்வளவு எளிதல்ல

காவல்துறையில் எப்போதுமே நேர்மையாக இருப்பதென்பது அவ்வளவு எளிதல்ல, டிஜிபி சுனில்குமார் சிங் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதமாக கூறினார்.

டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு
author img

By

Published : Oct 31, 2022, 7:54 PM IST

Updated : Nov 1, 2022, 6:47 PM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் இன்றுடன் பணி ஓய்வு பெறும் சுனில் குமார் சிங் மற்றும் ஷகீல் அக்தர் ஆகிய இரு டி.ஜி.பி-க்களுக்கும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையுடன் பிரிவு உபச்சார விழா நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிவிரைவுப்படை, கமாண்டோ படை, தமிழ்நாடு ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று டி.ஜி.பி-க்கள் இருவரும் பார்வையிட்டு பின் அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, டி.ஜி.பி சுனில் குமார் சிங் ஒரு சிறந்த மனிதர் என்பது மட்டுமல்லாமல் மிக நேர்மையான காவல்துறை அதிகாரி, எப்போதுமே நேர்மையாக இருப்பது என்பது எளிதல்ல என அவர் பெருமிதம் கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற பணி ஓய்வு பெறும் நிகழ்ச்சி

தமிழ்நாடு காவல் பணியில் அவர் ஆற்றியுள்ள பணி அளப்பரியது என்பதை உறுதிபடுத்தும் வகையில் ஜனாதிபதி காவல் பதக்கம் உள்ளிட்ட விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. அதேபோல டி.ஜி.பி ஷக்கீல் அக்தரும் மிகச் சிறந்த காவல்துறை அதிகாரியாக திகழ்ந்துள்ளார். அவரது இளமையான தோற்றம் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை ஏற்க மறுக்க வைக்கிறது.

இவர்களது நட்பு கடந்த 35 ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இவர்களின் பணி ஓய்வு சிறப்பானதாக அமைய வேண்டும் என விரும்புகிறேன் என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய டிஜிபி ஷகீல் அக்தர், தமிழ்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற நிலை வந்தபோது மொழியும், கலாச்சாரமும் எனக்கு ஒத்துப்போகுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் இங்கு வந்தபின் இதுதான் எனக்கான இடம் என்பதை உணர்ந்துகொண்டதாக கூறினார். மேலும் பாபர் மசூதி இடிப்பின்போது சேலம் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றிய போது நாடு முழுவதும் பதற்ற நிலையில் இருந்த போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இரண்டு கருத்துகளை முன்வைத்தேன். இடிந்து போன பாபர் மசூதி போராட்டத்தினால் திரும்பி வரப்போவதில்லை என்று கூறி சுமூகமாக கூட்டத்தை கலைத்ததாக அவர் கூறினார். 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது அந்தமான் நிக்கோபாரில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் பணியாற்றியுள்ளேன்.

பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்வு கண்ட நினைவுகளை தமிழ்நாடு காவல்துறை எனக்கு அளித்துள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த காவல்துறையான தமிழ்நாடு காவல் துறையில் நான் பணியாற்றியுள்ளதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என டிஜிபி சைகில் அக்தர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய டிஜிபி சுனில்குமார் சிங், காவல்துறை பணி எவ்வளவு சவாலானது என்பதை அனைவரும் அறிவர். அத்தகைய சவாலான பணியை கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக செய்துள்ளேன் என்பதில் எனக்கு பெருமை உண்டு. நேர்மையுடனும், கடமை உணர்வுடனும் எனது பணியை முடித்து இன்றுடன் நிறைவு செய்கிறேன். நேர்மையுடனும், மனிதாபிமானத்துடனும் தமிழக காவல்துறை என்றென்றும் சிறந்து விளங்க வேண்டும் என விரும்புகிறேன்.

எஸ்.பி-யாக நான் இருந்த காலகட்டத்தில் கடுமையான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டபோது அப்போது எஸ்.பி-யாக இருந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு எனக்கு உதவி புரிந்ததையும் இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். ஜென்டில்மேன் கமிஷ்னரான சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் எனது நன்றிகள் என அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'பதிவுத்துறையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.23,066 கோடி வருவாய்' - அமைச்சர் பி.மூர்த்தி

Last Updated : Nov 1, 2022, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.