ETV Bharat / state

முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை மரணம் - beela rajesh FATHER death

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை எல்.என்.வெங்கடேசன் இன்று (ஆகஸ்ட் 23) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை மரணம்

author img

By

Published : Aug 23, 2020, 5:55 PM IST

Updated : Aug 23, 2020, 7:20 PM IST

சாத்தான்குளம் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ராணி வெங்கடேசனின் கணவரும், முன்னாள் தலைமை காவல்துறை அலுவலருமான எல்.என். வெங்கடேசன் காலமானார். இவர், முன்னாள் சுகாதாரத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம் வாழையடியைப் பூர்வீகமாகக் கொண்ட எல்.என். வெங்கடேசன் சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவர், டிஜிபியாக பணி செய்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றவர்.

இவரின் உயிரிழப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காவல் துறையில் படிப்படியாக பல்வேறு உயர் பொறுப்புகளைப் பெற்று சிறப்பாக செயல்பட்டவர் என்றும்; காவல் துறையினருக்கு முன்மாதிரியாக அவர் திகழ்ந்தார் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர்: காவல் துறையினர் மரியாதையுடன் தகனம்!

Last Updated : Aug 23, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.