சென்னை: பொதுவாக நெய்யை சமையலுக்கு பயன்படுத்துவர். அதைத் தவிர்த்து சிலர் விளக்கு ஏற்றுவதற்காகவும் பயன்படுத்துவர். ஆனால், நெய் சருமத்திற்கு ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் (moisturizer) என்று எத்தனை பேருக்கு தெரியும்? நெய்யில் உள்ள அழகு நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நெய் சருமத்திற்கு நல்லதா? நெய் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. குறிப்பாக சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகத்தில் தோன்றும் முகப்பருக்களை நீக்கி முகத்திற்கு பிரகாசமான தோற்றத்தை அளிக்கும். நெய்யை பயன்படுத்தினால், முகத்தில் இருக்கும் வடுக்கள், காயங்கள், கரும்புள்ளிகள், கட்டிகள், தீக்காயங்கள், முகப்பருக்களால் வந்த கட்டிகள் அனைத்தும் மறையும்.
உதடு மென்மையாக வேண்டுமா? பொதுவாக பெண்கள் உதடு மென்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், சில சமயங்களில் வறட்சியாகவும், கருமையாகவும், வெடிப்பு போன்று தோன்றி சுருக்கமாகவும் இருக்கும். பொதுவாக இவை தண்ணீர் பற்றாக்குறை, வெயில் படுவது மற்றும் தரம் குறைவான லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படலாம். எனவே, உடலுக்கு தேவையான தண்ணீரை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கூடவே இரவில் தூங்கும் போது உதட்டில் நெய் தடவினால் உதடு மென்மையாகும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
கண்களை சுற்றி கருவளையம் நீங்க: நெய்யில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. எனவே, அவற்றை கண்களை சுற்றி உள்ள கருவளையத்தை போக்க உதவும்.
கூந்தலில் நெய் தடவலாமா? நீளமான முடி வேண்டும் என்பது பெண்களின் ஆசை. ஆனால் அதை சரிவர பராமரிப்பதில் அவர்கள் போதுமான கவனம் செலுத்த தவறுகின்றனர். இதனால் முடி உதிர்வு, முடி உடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை சரி செய்ய கூந்தலில் நெய்யை தேய்கலாம் அது சிறந்த பலன் தரும்.
ஆயிலி சருமம் உள்ளவர்கள் நெய்யை முகத்தில் தேய்கலாமா? எண்ணெய் சருமம் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் நெய் பயன்பாட்டை தவிர்ப்பது சிறந்தது. முகப்பருக்கள் சரியாக வேண்டும் என நினைத்து நெய்யை தடவினால் அது உங்கள் முகத்தில் உள்ள முகப்பருக்களின் வளர்ச்சியை தூண்டிவிடும்.
நெய்யின் ஆயுர்வேத பயன்பாடு: ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, நெய் அஜீரணத்திற்கு உதவுகிறது. மேலும், இது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
பெண்கள், குறிப்பாக கர்ப்பமாக இருப்பவர்கள் தினசரி உணவில் நெய் சேர்க்க வேண்டும் என்று பல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . இது குழந்தையின் எலும்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: Home Remedies for Stomach Pain in tamil: அடிக்கடி வயிறு வலி வருதா.? இதுகூட காரணமா இருக்கலாம்.!