ETV Bharat / state

சுயஉதவிக் குழுக்களைக் கட்டாயப்படுத்தும் கடன் நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Jul 15, 2020, 4:55 PM IST

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்தும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராகப் புகார் அளிக்க மாவட்ட வாரியாக தனி அலுவலர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், ரிசர்வ் வங்கியும் நான்கு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Banks urges to Self help groups pay instalments, Notice to state and RBI, MHC order

ஊரடங்கு காரணமாக கடன் தவணை, வட்டியைச் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த கடன் நிறுவனங்கள், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான சுகந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “ரிசர்வ் வங்கி உத்தரவிற்கு முரணாக சிறு கடன் நிறுவனங்கள் கடனை வசூலித்துவருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிராக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அளிக்கும் புகார்களைப் பெற மாவட்ட வாரியாக தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

கடன் தொகை, வட்டியைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு கடன் நிறுவனங்கள் மூலம் கடன் பெறும் சுயஉதவிக் குழுக்கள், அதன் உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பிரித்துக் கொடுப்பதாகவும், அதை அவர்களின் வருமானத்திற்கேற்ப வார தவணையாகவோ, மாத தவணையாகவோ ஆயிரம் ரூபாய் முதல் மூன்றாயிரம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்துவார்கள் என்றும், அவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகை மூலம் கடன் அடைக்கப்படும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஊரடங்கு காரணமாக வருமானமில்லாமல் உறுப்பினர்கள் தவித்துவரும் நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென சிறு கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், ரிசர்வ் வங்கியும் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் ஊரக வளர்ச்சித் துறையை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.