ETV Bharat / state

கரோனா தொற்றின் ஹாட்ஸ் ஸ்பாட்டாக மாறும் வங்கிகள்: அச்சத்தில் தவிக்கும் ஊழியர்கள்! - கரோனா பரவும் அபாயம் உள்ளது.

சென்னை: கரோனா தொற்றின் ஹாட் ஸ்பாட்களாக வங்கிகள் உருவாகுமோ என்கிற அச்சத்தில் வங்கி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

corona
corona
author img

By

Published : Jul 27, 2020, 5:29 PM IST

Updated : Jul 27, 2020, 5:55 PM IST

மக்களின் அன்றாடப் பயன்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு வங்கியின் மூலம் செயல்படும் பணப் பரிவர்த்தனை மிகவும் முக்கியமானது. இதனால், தேசியப் பேரிடர் என அறிவிக்கப்பட்ட கரோனா காலத்திலும் வங்கிகள் அத்தியாவசியம் என்ற முறையில் செயல்பட வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த மே 22ஆம் தேதி முதல் வங்கிகள் தடையின்றி சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன.

மக்களின் தேவைகளுக்கேற்ப ஏ.டி.எம்-களிலும் தேவையான பணம் நிரப்பபட்டு வருகிறது. ஆனால், வங்கிப் பணியாளர்கர்கள் மட்டும் கரோனா தொற்றுக்கு அப்பார்பட்டவர்கள் அல்ல என்பதே நிதர்சனம். சென்னையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 700 பேர் வரை கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனாலும், வங்கி சார்ந்த பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒரு பக்கம் கரோனா அச்சுறுத்தலோடு பணியாற்றும் வங்கி பணியாளர்கள் மீது கேட்கப்படும் கேள்விகளுக்கு, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் அருணாச்சலம் கூறியதாவது, "வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் தான் வேலை செய்கிறார்கள்.

தற்போது வங்கிக் கிளைகள் கரோனா தொற்று ஏற்படும் ஹாட் ஸ்பாட்டாக மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. காரணம் ஊழியர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சம்பந்தப்பட்ட வங்கிகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கான போக்குவரத்து என்பது சவாலாக உள்ளது.

குறிப்பாக, வங்கி ஊழியர்கள் என்றாலும் பல நேரங்களில் காவல்துறையினர் அனுமதிப்பதில்லை. அவர்களின் அடையாள அட்டையை காட்டியும் இந்த நிலை பெருமளவில் நீடிக்கிறது. வங்கிகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் எல்லோரும் இரு சக்கர மற்றும் கார்கள் ஓட்டுபவர்கள் என கூறிவிட முடியாது. கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் தான் பணிக்கு வந்து செல்கின்றனர். பெண்களையும் காவல்துறையினர் அனுமதிக்க மறுக்கும் போது எப்படி அவர்களால் பணிக்கு வர முடியும். வங்கிகள் அனைத்திலும் பாதுகாவலர்கள் இல்லாத பட்சத்தில் மக்கள் தகுந்த பின்பற்ற வைப்பது சாத்தியமில்லை.

டெபாசிட்கள் சுத்தமாக குறைந்து விட்டது என்பது உண்மை. வாடிக்கையாளர்கள் தங்களின் டெபாசிட் பணத்தை எடுக்துக்கொள்வதற்கு தேவையான பணத்தை அனைத்து வங்கிகளிலும் வைத்துள்ளதால் அதில் பிரச்னை இல்லை. தினந்தோறும் கரோனா தொற்று பயத்தில் தான் பணியாற்றுகிறார்கள். பணத்தின் மூலம் கரோனா பரவாமல் இருக்க பாதுகாப்பாக செயல்படுகின்றனர்.

அல்ரா வயலட் லைட் இருந்தாலும் கையில் எண்ணும் போது ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியவில்லை. அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை என்கிற கட்டுப்பாடுகளை தளர்த்தி, 10 முதல் 2 மணி வரை வங்கிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைக்க விரும்புகிறோம்" என வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற பாதிப்புகளை தவிர்க்க தேவையான குறைந்தபட்ச ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தனியார் வங்கிகளை போல் அரசு வங்கிகளிலும் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் உத்திரவாதத்தை உறுதிப்படுத்தி கரோனா தொற்று பாதிப்பிலிருந்து வங்கி ஊழியர்கள் மற்றும் மக்களை காக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ’கூண்டு கட்டிய லாரிகளை எடுத்துச் செல்ல உரிமையாளர்கள் வரவில்லை’ - கலங்கும் பட்டறை உரிமையாளர்கள்!

Last Updated : Jul 27, 2020, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.