ETV Bharat / state

மொழி தெரியாததால் காணாமல் போன சகோதரரை தேடி அலையும்  வங்கதேச இளைஞர் - Vellore

சென்னை: சிகிச்சை பெறுவதற்காக, தமிழகம் வந்து காணமால் போன தன் சகோதரரை கண்டுப்பிடித்து தருமாறு வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மொழி தெரியாததால் காணாமல் போன சகோதரரை தேடி அலையும்  வங்கதேச இளைஞர்
author img

By

Published : Apr 11, 2019, 7:40 PM IST

வங்கதேசத்தை சேர்ந்தவர் புராஜஷ் சந்திர நாத். இவரது சகோதரர் பங்கஜ் சந்திர நாத் (வயது 28) வங்கதேசத்தில் நடந்து விபத்து ஒன்றில் அவரது வலது கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பங்கஜ் சந்திரநாத்துக்கு சிகிச்சை அளிக்க, வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ள மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக புரோதன்ய சந்திர நாத், பங்கஜ் சந்திர நாத் மற்றும் தன் உறவினர்களுடன் வேலூருக்கு வந்துள்ளார். இதையடுத்து, வேலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பங்கஜ் சந்திர நாத் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனார்.

இது தொடர்பாக, அவரது சகோதரர் புராஜஷ் வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக வேலூரில் எங்குதேடியும் தனது சகோதரர் கிடைக்காத நிலையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுமாறு புராஜஷ் சந்திர நாத் போலிசாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தமிழ் மொழி தெரியாமல் காணமால் போன, தன் சகோதரனை கண்டு பிடிக்கக் கோரி புராஜஷ் சந்திர நாத் தனது உறவினருடன் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மொழி தெரியாததால் காணாமல் போன சகோதரரை தேடி அலையும்  பங்களாதேஷ் இளைஞர்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் புரோதன்ய சந்திர நாத். இவரது சகோதரர் பங்கஜ் சந்திர நாத் பங்களாதேஷில் ஒரு விபத்தில் சிக்கி உள்ளார். இதில் அவரது வலது கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனநலம்  பாதிக்கப்பட்டிருந்த பங்கஜ் சந்திரநாத்துக்கு சிகிச்சை அளிக்க, அங்குள்ள மருத்துவமனையில் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். சிகிச்சைக்காக வந்த இடத்தில் பங்கஜ் சந்திர நாத் வேலூரில் திடீரென தங்கியிருந்த அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  கடந்த 2 மாதங்களாக எங்குதேடியும் கிடைக்காத நிலையில் வேலூரில் அங்கிருந்த கடைத்தெருவில் உள்ள வணிகர்கள் சிலர்  பங்கஜ் சந்திரனாத் இந்த வழியாக சென்றதாக கூறியுள்ளனர். இதனால் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுமாறு போலிசாரிடம் கூறியுள்ளனர்.ஆனால் 3மாதம் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் போலிசார் மேற்கொள்ளவில்லை எனவும் இதன் காரனமாக மொழி தெரியாமல் தனது சகோதரனை கண்டு பிடிக்க புரோன்யா சந்திர குமார் தனது உறவினருடன் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.