சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் கூறும் பொழுது, சிறப்பு சிகிச்சை குறித்து பல்வேறு செய்திகள் சமீபகாலமாக வருகிறது. அப்போது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் நோயாளிகளுக்கு செய்யப்பட்ட சிகிச்சை முறைகளை விளக்கி கூறுகின்றனர்; இதுபோன்ற செயல்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு செய்வது மருத்துவ வரைமுறைகளை மீறிய செயலாகும். நோயாளிகளை நேரடியாக பொது இடங்களில் காண்பிப்பதும் அறிமுகம் செய்வதும் அவர்களுடைய சிகிச்சைகளை பொதுவாக தெரிவிப்பதும் மருத்துவ வரைமுறைகளின் படி தவறான செயல்கள் ஆகும். இவ்வாறு செய்யும் மருத்துவர் நோயாளிகள் குறித்து ரகசியங்களை காக்க தவறியவர் ஆகிறார்.
மேலும் நேரடியாக தாங்கள் செய்த சிகிச்சைகளையும் செய்முறைகளையும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் தெரிவிப்பார் என்றால் அது சுய விளம்பரம் என கருதி மருத்துவ வரைமுறைகளை மீறிய செயலாக கருதப்படும்;
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இதுகுறித்து பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவரின் மீது மருத்துவ ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனவே இதுபோன்று நோயாளிகளை காண்பிக்கும் செய்கைகளும் சுய விளம்பரம் செய்யும் செயல்களும் மருத்துவ கொள்கைப்படி வரை முறைகளை மீறியதாக வரும் காலங்களில் கருதப்பட்டு அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நலனுக்காக வெளியிடப்படும் தகவலில் சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயரோ அல்லது அவர்களுடைய புகைப்படமோ வெளியிடக்கூடாது.
நோயாளிகள் பெயரோ புகைப்படமோ வீடியோ அவர்களுடைய விபரங்களையும் வெளியிடக்கூடாது; சிறப்பு சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்த விபரங்கள் மருத்துவமனைகளில் பெயரில் பொதுவாக வெளியிடலாம். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர் அல்லாத மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொள்ளலாம். அரசு மருத்துவமனையில் மருத்துவ நிர்வாகிகளும் கலந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் தனியார் ஆன்லைன் டைரக்ட் அல்லது விளம்பரங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ விளம்பரம் செய்வது தவறாகும். தனியார் மருத்துவமனை வெப்சைட்டிலும் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் பெயர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இருக்கலாம். ஆனால் மருத்துவர்கள் பற்றி எந்தவித சிறப்பு விபரங்களையும் வெப்சைட்டில் வெளியிடக்கூடாது.
தனியார் மருத்துவமனையில் மற்றும் கிளினிக் குறித்த விளம்பரங்களுக்கு எந்தவித தடையும் இல்லை. தனியார் மருத்துவமனை தங்களுக்காக வெப்சைட் வைத்துக் கொள்ளலாம். அந்த வெப்சைட்டில் அங்கு பணியாற்றும் சிறப்பு மருத்துவர்கள் பெயரையும் மற்றும் அங்கீகரிப்பு பட்டங்களை லிஸ்ட் செய்யலாம். தனியார் மருத்துவமனைகளில் வெப்சைட்டில் அங்கே உள்ள வசதிகள் சிறப்பு கருவிகள் உபகரணங்கள் அளிக்கும் சிறப்பு சிகிச்சை முறைகள் சிகிச்சை அளிக்கப்படும் நோய்கள் குறித்த விபரங்களை வெளியிடலாம் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் பிரபல தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த ஐந்து மருத்துவர்களுக்கு விளம்பரம் செய்ததற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர் களை கண்டறிய doctor search app அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதில் அஞ்சல் குறியீட்டு எண் அடுக்கு தேடினால் அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். விதிகளுக்கு புறம்பாக தனியார் இணையதளங்களில் மருத்துவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த ஆப் மூலம் இது தவிர்க்கப்படும் என நம்புகிறோம். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகப்படுத்தும் செயலி மூலம் 80,000 மருத்துவர்கள் தகவல்களை தெரிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் பெறுவதும் கணினி மூலம் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - மா.சுப்பிரமணியன்