ETV Bharat / state

'மதுரை வீரன் உண்மை வரலாறு' புத்தகத்துக்கு தடை விவகாரம்: குழந்தை ராயப்பன் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 8:55 PM IST

2015 ஆம் ஆண்டு மதுரைவீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ததையடுத்து, அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என புத்தக ஆசிரியர் குழந்தை ராயப்பன் தரப்பு விளக்கமளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மதுரைவீரன் வாழ்க்கை வரலாறு புத்தகம்

சென்னை: மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார் எழுத்தாளர் குழந்தை ராயப்பன். இந்தப் புத்தகம் ஆட்சேபனைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளது என்றும், பல சமூகத்தினரை விமர்சனம் செய்யும் வகையில் இருப்பதாகவும் கூறி, 2015 ஆம் ஆண்டு மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்குத் தடை விதித்து, புத்தகங்களைப் பறிமுதல் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மதுரைவீரன் உண்மை வரலாறு புத்தக ஆசிரியர் குழந்தை ராயப்பன், கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், புத்தகத்தில் சாதி ரீதியாக எதுவும் இல்லை என்றும், அதனால் புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு முன்னதாக தனி நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின்படி, புத்தகங்களைப் பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க, வழக்கைத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன் மற்றும் தனபால் அடங்கிய முழு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று(நவ.17) விசாரணைக்கு வந்தபோது, "மனுதாரர் தரப்பில், 2013ஆம் ஆண்டில் புத்தகம் வெளியிடப்பட்ட போது, பொது ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இல்லை. 2ஆயிரம் புத்தகங்கள் விற்கப்பட்ட நிலையில், தடை குறித்து புத்தக ஆசிரியருக்கு அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. பறிமுதல் தொடர்பாக எந்த நோட்டீஸும் அளிக்கவில்லை" என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து, அரசுத்தரப்பில், "குற்ற விசாரணை முறைச் சட்டம் 95வது பிரிவின் கீழ், புத்தகத்தைத் தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, குற்ற விசாரணை முறைச்சட்டம் 96வது பிரிவின் கீழ் 2 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் சாசனம் 226 வது பிரிவின் கீழ் இதற்கு ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. ரிட் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்த தீர்ப்புகளுடன் மனுதாரர் தரப்பிலிருந்து விளக்கமளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 7,007 பேர் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.