ETV Bharat / state

தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வு - கண்காணிப்பாளர்களாக தமிழ்ப்பாட ஆசிரியர்களை நியமிக்கத் தடை - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு கண்காணிப்பாளர்களாக தமிழ்ப்பாட ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கண்காணிப்பாளர்களாக தமிழ்பாட ஆசிரியர்களை நியமிக்க தடை

author img

By

Published : Oct 9, 2022, 9:51 PM IST

சென்னை: பொதுத் தேர்வில் பின்பற்றப்படும் நடைமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக வரும் 15ஆம் தேதி தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் போது தேர்வு மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதில், “தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, 15ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது.

தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் ஓஎம்ஆர் விடைத்தாள்கள் (அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில்) பெறப்பட வேண்டும்.

தமிழ் மொழிப்பாட ஆசிரியர்களை தேர்வறை கண்காணிப்பாளராக நியமித்தல் கூடாது.ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் மட்டுமே வழங்கப்படும்.

எனவே, எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு மேல் ஒரு தேர்வறையில் அமர அனுமதிக்கக்கூடாது. தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான வினாத்தாள் கட்டுக்களை தேர்வு மையத்தில் காலை 8.45 மணிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்விற்கான வினாத்தாள் தேர்வு துவங்குவதற்கு கால் மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9.45 மணிக்கு பிரிக்கப்பட்டு முறையே காலை 10 மணிக்கு தேர்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். தேர்வு நேரத்தில் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர் பட்டியலில் பெயர் உள்ள தேர்வர்களை மட்டும் தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் அவர்களுடைய பதிவெண்ணிற்குரியவை என்பதை உறுதி செய்து கொண்டு மாணவர் மற்றும் அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.

நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, அதே நுழைவுச்சீட்டில் உரிய தேர்வரின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர் முத்திரையுடன் சான்றொப்பம் பெற வேண்டும். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘ மழைநீர் வடிகால் பணிகளைப் பருவமழைக்கும் முன்னால் முடிக்க வேண்டும்’ - இறையன்பு அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.