ETV Bharat / state

'கொலையுதிர் காலம்' படத்திற்கு இடைக்கால தடை! - நயன்தாரா ரசிகர்கள்

சென்னை: நடிகை நயன்தாரா நடித்துள்ள “கொலையுதிர் காலம்” என்ற படத்தை, அதன் தலைப்பில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kolaiyuthir kalam
author img

By

Published : Jun 11, 2019, 6:49 PM IST

Updated : Jun 11, 2019, 7:27 PM IST

லேடி சூப்பர் ஸ்டார் என்று திரை உலகில் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா அண்மைக் காலமாக நடிகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். 'மாயா', 'கோலமாவு கோகிலா', 'அறம்', 'ஐரா', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் அடுத்து அவர் நடிப்பில் வெளிவரக் காத்திருக்கும் படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட், ஸ்டார் போலாரிஸ் என்ற நிறுவனம் தயாரித்து ஜூன் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக விளம்பரங்கள் வெளியானது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய “கொலையுதிர் காலம்” நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து ரூ.10 லட்சத்திற்கு வாங்கி தனது தாய் பெயரில் உரிமை பெற்றுள்ளார் 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார்.

இந்நிலையில், தன் தாயார் பெயரில் உரிமைப் பெற்று வைத்திருக்கும் 'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறியச் செயலாகும். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 'கொலையுதிர் காலம்' என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது. மேலும், மனுவுக்கு ஜூன் 21ஆம் தேதிக்குள் படத்தயாரிப்பு நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Intro:Body:

“கொலையுதிர் காலம்” என்ற தலைப்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய “கொலையுதிர் காலம்” நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் “விடியும் முன்” படத்தை இயக்கிய பாலாஜி குமார், வாங்கி உரிமை பெற்றுள்ளார்

இந்நிலையில் நடிகை நயந்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் என்ற பெயரில்  எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ்  என்ற நிறுவனம் தயாரித்து படத்தை ஜீன்14 ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக விளம்பரங்கள் வெளியானது.

தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் என்ற  தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  கிருஷ்ணன் ராமசாமி, கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயந்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜூன் 21 ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

Conclusion:
Last Updated : Jun 11, 2019, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.