ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கான ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன? - கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கான ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்
author img

By

Published : Aug 29, 2022, 5:56 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது.

மாணவியின் தற்கொலை குறிப்பில் இருந்து கூட, ஆசிரியர்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். அதனால் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார்.

படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் நான்கு வாரங்களுக்கு சேலத்தில் தங்கி இருந்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பின் நான்கு வாரங்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நான்கு வாரங்களுக்கு மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பின் நான்கு வாரங்களுக்கு சிடிசிஐடி போலீசார் முன் தினமும் காலை மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், விசாரணைக்கு அழைக்கும் போது போலீசார் முன் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் நண்பர்கள் வைத்த பேனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.