ETV Bharat / state

பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜர் - etv bharat

சென்னை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.

பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜர்
பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜர்
author img

By

Published : Aug 6, 2021, 8:02 PM IST

சென்னை: தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை தனது யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடிய புகாரின் அடிப்படையில், யூடியூபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து பப்ஜி மதனுக்கு துணைப்புரிந்ததாக அவரது மனைவி கிருத்திகாவை காவல் துறையினர் கைது செய்தனர்.

பப்ஜி மதன் மீது குண்டாஸ்

மதனைத் தேடி வந்த நிலையில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் காவல் துறையினர் கைது செய்தனர். பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த ஜூலை 6 ஆம் தேதி உத்தரவிட்டார்.

ஆதாரங்கள் தாக்கல்

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மதன் ஜாமீன் கோர முடியாத சூழல் ஏற்பட்டது. பப்ஜி மதன் இனி அறிவுரை கழகத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும். மேலும், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் காவல் துறையினர் அறிவுரைக் கழகத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

பப்ஜி மதன் ஆஜர்

அதன் அடிப்படையில் பப்ஜி மதன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் குண்டாஸ் அறிவுரைக் கழகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமன், ரகுபதி, மாசிலாமணி ஆகியோர் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தவறு ஏதும் செய்யவில்லை

அப்போது பப்ஜி மதன் மற்றும் கிருத்திகா தங்களது விளக்கங்களை தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை தாங்கள் விளையாடவில்லை எனவும் கொரியன் வெர்ஷன் பப்ஜி விளையாட்டை தான் விளையாடியதாக தெரிவித்தனர். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு தவறு ஏதும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டனர். மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் சரியா? என்பது குறித்து இக்குழு விசாரணை நடத்தியது.

அது சொகுசுக் கார்கள் தான்

இதற்கிடையே பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மனைவி கிருத்திகாவிடம், "நீ ஊடகத்தினரிடம் நமது கார்களை சொகுசுக் கார்கள் இல்லை என்று தவறாகக் கூறிவிட்டாய், அது சொகுசுக் கார்கள்தான்" என்றார்.

அதன் மதிப்பென்ன உனக்கு தெரியுமல்லவா?

மேலும், கார்கள் எங்குள்ளது எனத் தெரியுமா? என மதன் தனது மனைவியிடம் கேட்டார். அதற்கு கேள்விக்குறியுடன் பார்த்த மனைவி கிருத்திகாவிடம் மதன், "காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் நமது கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பென்ன என்பது பற்றி உனக்கு தெரியுமல்லவா? எனவே அதை நமது வழக்கறிஞர்களிடம் கூறி வெளியில் எடுக்க ஏற்பாடு செய். அவர்கள் நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால் கொஞ்சம் எதிர்பார்ப்பார்கள்" என்று தோரணையாக கூறினார்.

பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜர்

வழக்கை கையாள தெரியும்

தொடர்ந்து, "இவர்கள் நம்மை பின் தொடரலாம் ஆனால் எதுவும் செய்யமுடியாது. நான் வெளியில் வருவேன், வந்தவுடன் வழக்கை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து எனக்கு நன்றாகத் தெரியும்" என மதன் துணிச்சலுடன் மனைவியிடம் பேசினார்.

நிச்சயம் வெளியில் வருவேன்

இதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் சமூக வலைதளம் மூலம் நிகழ்த்திய குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில் குண்டாஸ் செல்லாது என நீதிபதி அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி பேசிய மதன், "இங்கு இல்லையென்றாலும் 6 மாதம் காத்திரு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு நான் நிச்சயம் வெளியில் வருவேன். அதன் பின் பார்த்துக்கொள்ளலா" என முழு நம்பிக்கையுடன் மனைவியிடம் கூற அனைத்து விவரங்களையும் அவரது மனைவி கிருத்திகா கேட்டுக்கொண்டார்.

அபராதம் கட்டத் தயார்

இதுமட்டுமில்லாமல் , "யூ-டியூப் முழுவதும் டிக்-டாக் வீடியோக்கள் என ஆபாசங்கள் நிறைந்துள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டும் குறிவைப்பது ஏன்? என காவலர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் உன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றனர். அதற்கு முடிந்தால் குற்றத்தை நிரூபியுங்கள், நீங்கள் நிரூபித்துவிட்டால் நான் 10 லட்சம் ரூபாயை அபராதமாக கட்டத் தயார் என்றேன்" எனவும் தனது மனைவியிடம் மதன் பேசினார்.

இதையும் படிங்க: ஜி.பி.முத்து மீது புகார் கொடுத்த நடிகர் சுகுமார் - பின்னணி தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.