இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் ராஜா, செயலாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசு நவம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அலோபதி மருத்துவர்கள் செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதி ஆயோக் அமைப்பு மருத்துவக் கல்வி, பொதுமக்களுக்கான சுகாதார முறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகிய எல்லாத் துறைகளையும் நவீன மருத்துவம், ஆயூஷ் மருத்துவமுறையை கலந்து 2030இல் ஒரே கலவை முறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
எனவே இந்த அரசாணையை உடனடியாக ரத்துசெய்து அரசு திரும்ப பெறவேண்டும். மேலும் நிதி ஆயோக் அமைத்துள்ள மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்கும் விபரீதமான குழுக்களை கலைக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள், (கரோனா அவசர சிகிச்சை தவிர்த்து) மற்ற அனைத்து சிகிச்சைகளையும் தவிர்க்க உள்ளோம். மேலும் அவசர கிசிக்சைகள் தவிர்த்து மற்ற எந்தவிதமான சேவைகளும் செயல்படாது.
ஆயுர்வேத மருத்துவர்கள் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதை ஏற்றுக்கொள்வீர்களா? அந்தந்த மருத்துவ முறைகளின் தனித்துவத்தை காக்கவும், பொதுமக்களின் உடல்நலத்தை காக்கவும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சித்த மருத்துவத்தை அழிக்கும் எண்ணத்தோடு ஆயுஷ் அமைச்சகம் செயல்படுவது சரியல்ல'