தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றிலிருந்து தப்பிக்க தகுந்த இடைவெளியை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வையும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது மக்களிடம் ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை வீட்டில் எவ்வாறு தனிமைப்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு குறும்படத்தை தேசிய சுகாதார இயக்கத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளனர். மருத்துவர், பயிற்சி மருத்துவர், செவிலியர் உள்ளிட்டவர்கள் இந்த விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவுக்கும் பெரியம்மைக்கும் ஒரேமாதிரியான பராமரிப்பு முறை - மக்கள் நல்வாழ்வுத்துறை குறும்படம் வெளியீடு!