சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நேற்று (டிச.28) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
-
AVM Productions deeply laments the loss of Captain Vijayakanth.
— AVM Productions (@avmproductions) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Remembered by us as an incredibly humble and amiable individual, his generosity and kindness right upto aiding producers facing film release challenges, showcased his selfless nature. Treating everyone, from spot… pic.twitter.com/7uyO2Be0x1
">AVM Productions deeply laments the loss of Captain Vijayakanth.
— AVM Productions (@avmproductions) December 28, 2023
Remembered by us as an incredibly humble and amiable individual, his generosity and kindness right upto aiding producers facing film release challenges, showcased his selfless nature. Treating everyone, from spot… pic.twitter.com/7uyO2Be0x1AVM Productions deeply laments the loss of Captain Vijayakanth.
— AVM Productions (@avmproductions) December 28, 2023
Remembered by us as an incredibly humble and amiable individual, his generosity and kindness right upto aiding producers facing film release challenges, showcased his selfless nature. Treating everyone, from spot… pic.twitter.com/7uyO2Be0x1
இந்த நிலையில், ஏவிஎம் நிறுவனம் விஜயகாந்த் நடித்த படங்களின் காட்சிகளை தனது X பக்கத்தில் வெளியிட்டு, "அன்பானவர், அடக்கமானவர். திரைப்படங்கள் வெளியீட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் மனப்பான்மை மற்றும் கருணை கொண்டவர், அனைத்து தரப்பினர்களிடமும் சமமாகப் பழகும் தன்மை கொண்டவர். அவரது சிரிப்பை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
-
#Captain
— Aruna Guhan (@arunaguhan_) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A towering figure in the film industry, Vijayakanth Sir not only mesmerized us with his daredevil stunts and charismatic on-screen presence but also touched millions of lives with his humanitarian endeavors and kindness, being a role model to many of us.
Vijayakanth… pic.twitter.com/HPJIlKLyu1
">#Captain
— Aruna Guhan (@arunaguhan_) December 28, 2023

Vijayakanth… pic.twitter.com/HPJIlKLyu1#Captain
— Aruna Guhan (@arunaguhan_) December 28, 2023
A towering figure in the film industry, Vijayakanth Sir not only mesmerized us with his daredevil stunts and charismatic on-screen presence but also touched millions of lives with his humanitarian endeavors and kindness, being a role model to many of us.
Vijayakanth… pic.twitter.com/HPJIlKLyu1
தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்கையை அர்ப்பணித்தவர். ஏவிஎம் நிறுவனத்துடனான சிவப்பு மல்லி, தர்ம தேவதை, மாநகர காவல், சேதுபதி ஐ.பி.எஸ் போன்ற படங்கள் இனிமையான நினைவுகள். அவரின் மறைவிற்கு ஏவிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் இரங்கல் தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், ஏவிஎம் நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர் அருணா குகன் தனது X பக்கத்தில், "தமிழ் திரையுலகில் தலைசிறந்த ஆளுமை கொண்டவர். விஐய்காந்த் சார் துணிச்சலான ஸ்டண்ட் மற்றும் மக்களின் மனதைக் கவரக் கூடிய நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
தனது மனிதாபிமான மற்றும் கருணையினால் கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுபவர். நம்மில் பலருக்கு முன்மாதிரியாக உள்ளார். கேமராவிற்குப் பின் உள்ள அவரின் இரக்கம், உண்மையான அக்கறை அவரை வேறுபடுத்திக் காட்டியது. மக்களிடையே உண்மையான நாயகனாகத் திகழ்ந்தவர், விஐய்காந்த் சார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என தெரிவித்துள்ளார்.
-
#AVMTrivia | One of @iVijayakant Sir’s riskiest action sequences @avmproductions
— Aruna Guhan (@arunaguhan_) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Vijayakanth Sir is known for his exceptional stunts, that he always executed himself. He has the unique ability to rotate his legs in 360° in fight sequences, making him one of the most… pic.twitter.com/GxM7TJXMMq
">#AVMTrivia | One of @iVijayakant Sir’s riskiest action sequences @avmproductions
— Aruna Guhan (@arunaguhan_) December 18, 2023
Vijayakanth Sir is known for his exceptional stunts, that he always executed himself. He has the unique ability to rotate his legs in 360° in fight sequences, making him one of the most… pic.twitter.com/GxM7TJXMMq#AVMTrivia | One of @iVijayakant Sir’s riskiest action sequences @avmproductions
— Aruna Guhan (@arunaguhan_) December 18, 2023
Vijayakanth Sir is known for his exceptional stunts, that he always executed himself. He has the unique ability to rotate his legs in 360° in fight sequences, making him one of the most… pic.twitter.com/GxM7TJXMMq
இதற்கு முந்தைய X பதிவில், "விஐய்காந்த் சார் சண்டைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்றவர். இதற்காக தன்னைத்தானே தயார்ப்படுத்திக் கொள்வார். சண்டைக் காட்சிகளில் கால்களை 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் தன்மை இவரின் தனித்துவம். இதுவே அதிரடி கதாநாயகனாக அவரை மாற்றியது.
திரைத்துறை மற்றும் கதை சொல்வதில் அவரின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் தரும். சேதுபதி ஐ.பி.எஸ் படத்தின் முக்கிய சண்டைக் காட்சியில் 70 கார்கள் முக்கிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு, அவர் நடித்த சண்டைக் காட்சி அவர் வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான சண்டை (ஸ்டண்ட்) காட்சிகளில் ஒன்று" என தெரிவித்துள்ளார். இதனை அந்த வீடியோ காட்சிகளுடன் சமூக வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அஸ்தமனமானது கருப்புச் சூரியன்.. திரளான தொண்டர்கள் கண்ணீர்!