ETV Bharat / entertainment

மீண்டும் மிரட்ட வரும் அவதார் படத்தின் முதல் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு - Avatar by director James Cameron

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மீண்டும் மிரட்ட வரும் அவதார் படத்தின் முதல் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு

author img

By

Published : Aug 24, 2022, 6:27 PM IST

Updated : Aug 24, 2022, 7:36 PM IST

சென்னை: இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘அவதார்’. இவர் டெர்மினேட்டர், டைட்டானிக் உட்பட தனது படங்கள் மூலம் ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஆனார். கடந்த 2009ஆம் ஆண்டு இவர் இயக்கிய அவதார் திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது.

இத்திரைப்படம் தற்போது 4K 3D HDR தரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் செப்டம்பர் 23ஆம் தேதி புதிய பிரிண்டில் அவதார் படம் வெளியாக உள்ளது. இது குறுகிய காலத்திற்கு மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த அத்தியாயம் விரைவில் வரும் என்றும்; இதனைக் கண்டு மகிழுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதார் திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றது. இந்தப்படம் உலக அளவில் பலத்த வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தப் படம் வசூலித்துள்ளது.

இந்தாண்டு வெளியாகும் 2ஆம் பாகத்திற்கு 'அவதார் தி வே ஆப் வாட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே 9ஆம் தேதி இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்தது. மேலும் டிசம்பர் 16 முதல் உலகமெங்கும் பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இதையும் படிங்க: ஊனமுற்றவர்களைக் கேலி செய்த லால் சிங் சத்தா - காவல் ஆணையத்திடம் புகார்

Last Updated : Aug 24, 2022, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.