ETV Bharat / state

ஆவடி சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - நலம் விசாரித்த அமைச்சர்

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆவடி சிறுமியை அமைச்சர் நாசர் சந்தித்து நலம் விசாரித்தார்.

முதலமைச்சர் உத்தரவின்படி ஆவடி சிறுமியை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் நாசர்

author img

By

Published : Aug 19, 2022, 9:55 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் ஒன்பது வயது சிறுமி முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆ மருத்துவ குழுவினர் நேரில் வந்து சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் உடனடியாக சிறுமியை தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர்.

முதலமைச்சர் உத்தரவின்படி ஆவடி சிறுமியை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் நாசர்

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 18) காலை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்த நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அதி நவீன உடல் ஒட்டுறுப்பு சிகிச்சை நடைபெற உள்ளது. இதன் காரணமாக நேற்றிரவு சிறுமிக்கு எடுக்கப்பட்ட CT மற்றும் MRI ஸ்கேன் முடிவுகளை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அமைச்சர் நாசரிடம் விளக்கினர்.

பின்னர் குழந்தையின் பெற்றோர்களிடம் அமைச்சர் நலம் விசாரித்தார். அப்போது, முதலமைச்சர் தன்னை தினமும் நேரில் சந்திக்க அறிவுறுத்தியதாகவும், அறுவை சிகிச்சை கண்டு அஞ்ச வேண்டாம், அது வெற்றிகரமாக முடியும் என பெற்றோருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: ஆவடி சிறுமியின் சிகிச்சைக்கு முதலமைச்சர் உறுதுணை இருப்பார்...அமைச்சர் நாசர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.