சென்னை ப்ராட்வேயில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி சென்ற ஆட்டோ ஒன்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் அஸ்கர் அலி என்பவர் முத்தியால்பேட்டை பெண் உதவி ஆய்வாளரை மிரட்டினார். அவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுனர் அஸ்கர் அலி மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரை அலுவலர்கள் தொந்தரவு செய்யக்கூடாது: வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்!