ETV Bharat / state

சென்னையில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி கொலை.. சிறையில் இருந்து வெளி வந்த உடன் அரங்கேறிய சம்பவம் - ராபின்சன்

சென்னையில் சிறையில் இருந்து வெளிவந்த இருவர், ஆட்டோ டிரைவர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு 5 மணி நேரத்திற்குள் மீண்டும் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிண்டியில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி கொலை

author img

By

Published : Jul 1, 2023, 11:29 AM IST

சென்னை: வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (25). ஆட்டோ ஓட்டுநரான இவரை நேற்று இரவு 9.30 மணியளவில் கிண்டி மடுவாங்கரை அருகே சென்றபோது, திடீரென 2 பேர் பட்டாக்கத்தியுடன் ஓட ஓட விரட்டி உள்ளனர். அந்த நேரத்தில், கிண்டி வண்டிக்காரன் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து தினேஷ் தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால், அந்த இரண்டு பேர் கடைக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி வெளியே அனுப்பி உள்ளனர். பின்னர், வெளியே வந்த கடை உரிமையாளர் கடையின் ஷட்டரை மூடி பூட்டிவிட்டு கிண்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் திணேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

அதேநேரம், கொலை செய்துவிட்டு கத்தியுடன் கூலாக உட்கார்ந்திருந்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மணிவண்ணன், பள்ளிக்கரணை உதய் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆதம்பாக்கம் பகுதியில் ரவுடி நாகூர் மீரான் கோஷ்டியினருக்கும், ரவுடி ராபின்சன் கோஷ்டியினருக்கும் இடையே யார் தாதா என்ற பிரச்னையில் அவ்வப்போது கொலை, அடிதடி போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த ஆண்டு இந்த பிரச்னையில் ரவுடி நாகூர் மீரானை ராபின்சன் கோஷ்டியினர் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ராபின்சன், மணிவண்ணன் உதய் உள்பட பலர் சிறைக்கு சென்றனர்.

இதனால் நாகூர் மீரான் கோஷ்டியினர் பழிவாங்கும் நோக்கில் ராபின்சனை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம் நாகூர் மீரான் கோஷ்டியினர் ராபின்சனின் தங்கையின் நண்பரை கடத்தி ராபின்சன் இருக்கக் கூடிய இடத்தை கேட்டு தொந்தரவு கொடுத்து, பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டு வீசி அங்குள்ள இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ராபின்சன் குழுவில் உள்ள தினேஷ் மற்றும் குணா ஆகியோர் நாகூர் மீரான் கூட்டாளியிடம் அப்ரூவராகி ராபின்சனின் ரகசியத்தை தெரிவிக்கப் போவதாக சிறையில் உள்ள ராபின்சனுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து பல முறை நாகூர் மீரான் கேங்கில் சேர வேண்டாம் என தினேஷ் மற்றும் குணாவை எச்சரித்தபோதும் அவர்கள் கேட்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ராபின்சன் கோஷ்டியினரான மணிவண்ணன் மற்றும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த உதய் நேற்று மாலை சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளனர். பின்னர் இவர்கள் நேராக வேளச்சேரி பகுதிக்கு கத்தியோடு வந்து, ஆட்டோவில் இருந்த தினேஷை கொலை செய்வதற்காக விரட்டி உள்ளனர். அப்போது தினேஷ் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கடைக்குள் சென்று மறைந்தபோது விடாமல் தினேஷை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறையிலிருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் மீண்டும் ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு இவர்கள் சிறைக்கு செல்லும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னை திருமங்கலம் சிக்னலில் 'ஜெய் ஸ்ரீராம்' வாசகம்.. காவல் துறை பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.