அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகம் விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைக் கொடுப்பதில்லை என விசாரணைக் குழு புகார் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படும்.
இதனால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசியர்கள், மாணவர்கள் மத்தியில் அமைதியற்றச் சூழல் நிலவுகிறது. மேலும் விசாரணைக்கு முன்னிலையாகும் அலுவலர்களிடம் தேவையற்ற கேள்விகள் கேட்டு துன்புறுத்துகின்றனர். எனவே, விசாரணைக்கு முன்னிலையாகும் அலுவலர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என ஆசிரியர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவு