ETV Bharat / state

4 ஆண்டுகளாக பயன்படுத்தாத பொதுச்சொத்துகளுக்கு அதிக செலவு - தணிக்கைத்துறை அறிக்கை - High cost of public assets

பயன்படுத்தாத பொதுச்சொத்துகளுக்கு அதிக செலவு ஏற்படுவது குறித்து, இந்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 20, 2022, 12:21 PM IST

சென்னை: இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத்தலைவரின் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் கூறியவை:

  • திருச்சிராப்பள்ளி அருகே கள்ளிக்குடியில் 77.04 கோடி செலவில் வணிக வளாகம், முறையற்ற திட்டமிடல், கட்டப்பட்டவற்றை செயல்படுத்துதல் மற்றும் உரிய நிலம் அடையாளம் காணப்படுவதில் உள்ள குறைபாடுகளால் என நான்கு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
  • ஐந்து அரசு பாலிடெக்னிக் கல்லுரிகளில், விடுதிகள் செயல்பட போதிய முன்முயற்சிகள் இல்லாததால், 76.64 கோடி பயனற்ற செலவினம் ஏற்பட்டது. மதுரையில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையத்தை உருவாக்கத் தவறியதால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக 2.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடம் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. மேலும், ஓராண்டுக்கும் மேலாக, 2.73 கோடி வங்கிக்கணக்கில் முடக்கப்பட்டது.
  • சொந்த சீருடை பரிந்துரைத்த 72 மாதிரிப் பள்ளிகளைச்சேர்ந்த 31,152 மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் 4.13 கோடி வீண் செலவு ஏற்பட்டது. மேலும், 49 மாதிரி 21,086 பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 32.22 கோடி ரூபாய் மதிப்புள்ள சீருடைகள் மிகக்குறைவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
  • "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின்" மின் - பாடத்தொகுப்புகள் மற்றும் மின் - கற்றல் முகப்பு உருவாக்குதலுக்கான ஒப்பந்த ஆவணங்கள் தயாரிப்பதில் ஒப்பந்த மதிப்பீட்டில் முறைகேடுகள், ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் ஒப்பந்ததாரர் வழங்கிய சேவையின் தரத்தை உறுதி செய்யத் தவறியதால் 10.70 கோடி ரூபாய் தேவையற்ற செலவினமும் 5.17 கோடி ரூபாய் தொகை செலுத்தும் எதிர்பாராபொறுப்பும் ஏற்பட்டது.
  • மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், நீர்ப்பாசனக் குளங்களை செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் ஆகியவற்றுக்கான திட்டத்தை விரைவாக செயல்படுத்தியதால், மத்திய அரசின் 329.95 கோடி ரூபாய் உதவித்தொகை கிடைக்கப்பெறவில்லை. இது மாநில அரசின் நிதி நிலைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.
  • நடைபெற்று வந்த கட்டுமானப்பணிகளை இயற்கைப்பேரழிவுகளுக்கு எதிராக காப்பீடு (Insurance) செய்ய ஒப்பந்தகாரர் தவறியது மற்றும் ஒப்பந்த நிபந்தனையைத்தள்ளுபடி செய்ததன் விளைவாக ஓக்கி ( Ockhi ) சேதங்களின் மறுசீரமைப்பில் புயலினால் ஏற்பட்ட 3.15 கோடி ரூபாய் தவிர்க்கக்கூடிய செலவினம் ஏற்பட்டது.
  • வேலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு நெல் விதைகளை அவர்கள் தேவைக்கேற்ப வழங்காததால், 590 மெட்ரிக் டன் நெல் விதைகள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர்க்கக்கூடிய 1.33 கோடி ரூபாய் கூடுதல் செலவிற்கு வழிவகுத்தது.
  • மூன்று அரசு மருத்துவமனைகளின் தலைவர்களின் செயல்பாட்டால் MRI ஸ்கேனர்கள் பொருத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது. இதன் விளைவாக 1.12 கோடி தவிர்த்திருக்கக்கூடிய செலவு ஏற்பட்டது மற்றும் தேவைப்படும் நோயாளிகளுக்கு MRI ஸ்கேன் சேவைகள் தொடங்குவதில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களில் நிதித்துறைச்செயலரை சேர்ப்பதற்கான மசோதா நிறைவேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.