சென்னை: பரங்கிமலை போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மணிமாறன். இவர், புதிதாக வீடு ஒன்றை கட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்கு நிலைப்படி(வாசக்கால்) அமைக்கும் பணிக்காக விடுப்பு கேட்டுள்ளார். இதற்கு ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் உதவி ஆணையர் திருவேங்கடம் ஆகியோர் மரியாதை இல்லாமல் பேசியது மட்டுமல்லாமல், விடுப்பு தராமல் அலைக்கழிக்கிறார்கள் என மணிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதுபோன்ற அலுவலர்களால், தான் மன உளைச்சல் மற்றும் பணிச்சுமை ஏற்படுவதாக கூறி ஆடியோ ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளருக்கு விடுப்பு வழங்கப்படாததால், அவரது மகளின் நிச்சயதார்த்தம் நின்று விட்டதாக ஆடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். பின்னர் இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல், முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்கு காவல் அலுவலர்களுக்கு விடுப்பு மறுக்கக் கூடாது என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் மணிமாறனுக்கு அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது காவல்துறையினர் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை காப்பாற்ற மாட்டோம் - அரசு வழக்கறிஞர்