சென்னை: குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் வசிக்கும் 22 வயது இளம் பெண்ணை நேற்றிரவு (மே.12) அடையாளம் தெரியாத நபர் கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து இளம் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து காயமடைந்த இளம் பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
குன்றத்தூர் காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர்.
இந்த வழக்கு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் நுழைந்து இளம் பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது