சென்னை: புதுப்பேட்டை லப்பை தெருவில் வசிப்பவர் நவீன் குமார்(21). இவர் ஜூலை 22ஆம் தேதி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். கடந்த 22ஆம் தேதி இரவு வீட்டருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு பின்னர் 23ஆம் தேதி காலையில் பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் எழும்பூர் காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர். இந்நிலையில் அடையாளங்களை வைத்து தனிப்படை போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிந்தாதிரி பேட்டையை சேர்ந்த சாகுல் ஹமீத் (எ) பாபு மற்றும் ஜாபர் ஷெரிப் என்பது தெரியவந்தது.
சிக்கிய திருடர்கள்
இவர்கள் புதுப்பேட்டையில் புதிதாக வடிவமைக்கும் இருசக்கர வாகனத்தை குறிவைத்து திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இதேபோல் பல இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்களது கூட்டாளிகளான ஆலியார், தமீம் ஆகியோருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து திருடிய ஐந்து இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஆலியாரை எழும்பூர் காவல்துறையினர் கைது செய்யாமல் இருந்து வந்தனர்.
உதவி ஆணையர் மீது புகார்
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஆலியாரை கைது செய்யாமல் இருக்க அவரிடமிருந்து எழும்பூர் உதவி ஆணையர் அவரின் இரு வாகன ஓட்டுனர்களை வைத்து இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எழும்பூர் உதவி ஆணையர், இரு காவலர்களிடம் உயர் அலுவலர்கள் துறை ரீதியான விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து திடீரென சக்கரங்கள் கழண்டு கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் இன்று தாக்கல்!