சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் நாளை (ஜனவரி 9) தேதி தொடங்க உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர் நடந்தது. அது கரோனா காலகட்டம் என்பதால் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
அதில், அப்போது ஆளுநராக புதிதாக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி உரை நிகழ்த்தினார். உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததாக பல விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின் நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை (ஜன. 9) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்த உள்ளார்.
ஆர்.என். ரவி ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக புனித ஜார்ஜ் கோட்டை வர உள்ளார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இது வழக்கமான நடைமுறை, ஆனால் இந்த முறை காவல்துறையின் இசை வாத்தியம் முழங்க முழு காவல்துறையினர் மரியாதையுடன் வரவேறப்பு அளிக்கபட உள்ளது. இதற்கான ஒத்திகை நேற்று (ஜன. 7) தலைமை செயலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு எங்கள் நாடு - ஆளுநர் கருத்துக்கு சீமான் பதில்