இந்த விழாவில் செட்டிநாடு குழுமத் தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, ஸ்ரீராம் குழும நிறுவனங்கள் தலைவர் ஜி.வி.ராமன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டி.என்.மனோகரன், "ஏன் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக உள்ளது எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி கொடுப்பது பொதுத்துறை வங்கிகளே. இதில் நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
![யுவராஜ் எழுதிய அரெஸ்ட் என்பிஏ புத்தகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-arrest-npas-book-script-7208446_21122019222804_2112f_1576947484_803.jpeg)
அதேநேரத்தில் பொது மக்களின் குறைந்த கால டெபாசிட்கள் மூலமே கடன் வழங்கப்படுகிறது. திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள், தடைகள் உள்ளன.
அமெரிக்கா நாடு பெரும் மந்த நிலையின்போது இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி சிறப்பான வகையில் செயல்பட்டது. பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் போது, வாராக்கடன் கட்டுக்குள் இருக்கும். தற்போது ஐபிசி எனப்படும் திவால் சட்டம் சில இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
உலகின் முதல் 50 வங்கிகளில் இந்திய வங்கிகள் இடம் பிடிக்கவில்லை.
நாட்டின் மிகப் பெரிய வங்கி, சீனாவின் 10ஆவது பெரிய வங்கி, சிறிய அளவிலேயே இருக்கிறது. உலகப் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என்று கூற முடியாது. ஒரு காலத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய வளர்ச்சி இருந்தது. பின் வேலையில்லாத வளர்ச்சியாக இருந்தது. தற்போது, டிஜிட்டல் புரட்சியால் வேலை இழப்புடன் கூடிய வளர்ச்சி ஏற்படுகிறது.
இயந்திரமயமாக்கல், தானியங்கி தொழில்நுட்பம், இயந்திரக் கற்றல், பிளாக் செயின் உள்ளிட்ட தொழில் நுட்பங்களால் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
விவசாயப் புரட்சியில் இருந்து தொழில் புரட்சிக்கு மாற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் தேவைப்பட்டன. தொழில் புரட்சியில் இருந்து தகவல் புரட்சிக்கு 100 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், டிஜிட்டல் புரட்சிக்கான மாற்றம் குறுகிய காலத்திலேயே நடைபெற்றது. எதிர்பார்க்க முடியாத வேகத்தில் மாற்றம் நடைபெற்று வருகிறது. இதற்கேற்ப நாமும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஏழைகளுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டம் உள்ளது - பிரியங்கா காந்தி