ETV Bharat / state

மே மாதம் முதல் ஆன்லைனில் அரியர் தேர்வுகள்: தமிழ்நாடு அரசு தகவல் - chennai high court

சென்னை:  கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள், ஆன்லைன் மூலம் மே மாதம் முதல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

hc
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Apr 15, 2021, 2:55 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, விவசாய படிப்பு, மருத்துவ படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு, கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகவும், தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என தெரிவித்தனர்.மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள், ஆன்லைன் முறையில் நடத்தப்படும். தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது. மே மாதம் முதல் அரியர் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்-லைன் மூலமாகவோ அல்லது ஆப்- லைன் மூகமாகவோ அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும். தேர்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைக்கழக மானிய குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை விரைந்து வழங்க வேண்டும். இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.