ETV Bharat / state

ஆட்டோவில் சென்று வாக்கு கேட்போம், ஆட்டோ சின்னம் கேட்க மாட்டோம்! புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜூனமூர்த்தி

author img

By

Published : Jan 28, 2021, 2:50 PM IST

சென்னை: புதிய கட்சி தொடங்கபோவதாக அர்ஜூனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜூனமூர்த்தி

நடிகர் ரஜினிகாந்த் தான் தொடங்க இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜூனமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "புதிய கட்சியை விரைவில் தொடங்க போகிறேன். மாற்று சிந்தனை தமிழ்நாடு முழுவதும் காணப்படுகிறது. ஒரு நேர்மையான அரசியல் கட்சி உருவாக்க இருக்கிறோம்" என்றார்.

ரஜினி ரசிகர்களை மையப்படுத்தி தான் இந்த அரசியல் தொடக்கமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஜினி தெளிவாக கூறினார். மீண்டும் அவரை வலியுறுத்த கூடாது. அவரிடம் கற்றுக்கொள்ளலாம். ரஜினியின் டூப்பாக இருக்க முடியாது. இன்றைய சூழலில் அரசியல் மாற்றம் என்பது மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் யார் சரியானவர் என்ற கேள்வி தொடர்ச்சியாக இருந்து வருகிறது. 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி நிச்சயம் வரும்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்று சக்தியை கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். சாதி மதற்ற அரசியலை முன்னெடுப்போம். தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ரஜினி படம், அல்லது அவர் சொன்ன வார்த்தைகளை பயன்படுத்த மாட்டோம். விரும்பினால் ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் வந்து இனையலாம். ஆட்டோவில் சென்று வாக்கு கேட்போம்; ஆட்டோ சின்னம் கேட்க மாட்டோம்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: "ரஜினி கூறுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை" - நடிகை கஸ்தூரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.