ETV Bharat / state

பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக அறிவொளி பொறுப்பேற்பு!

author img

By

Published : Jun 5, 2023, 5:41 PM IST

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனராக அறிவொளி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடக்கக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

School Education
தமிழ்நாடு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்குனரின் முழு அதிகாரத்தையும் பள்ளிக்கல்வி ஆணையர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டதற்கு கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவிக்கு நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி முறைமை குறித்தும், பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்கள், மாணவ மாணவியரின் தேவைகள், பாடத்திட்டச் சிக்கல்கள் குறித்த அடிப்படை அனுபவமும், நடைமுறைச் சிக்கல்கள் சார்ந்த தீர்வுகள் எடுக்கும் திறனும் இருக்காது என்றும், தமிழக அரசின் இந்த முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: TN School Teachers: தொடக்கக் கல்வித்துறையில் 3612 ஆசிரியர்கள் பணியிட மாறுதல்!

இதனிடையே அண்மையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில், நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அதன் பிறகு புதிய ஆணையர் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக் கல்வித்துறைக்கு இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவம் வாய்ந்தவரும், தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்தவருமான அறிவொளி பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பற்றாக்குறை - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் என்ன?

தொடக்கக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக ராமேஸ்வர முருகன், பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனராக பழனிசாமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக குப்புசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக ராஜேந்திரன், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இடைநிலை இணை இயக்குனராக பூ.நரேஷ், மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக கோபிதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குனராக ராமசாமி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக சசிகலா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனராக செல்வகுமார், தொடக்கக் கல்வித்துறையின் நிர்வாக இணை இயக்குனராக சுகன்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனராக அறிவொளி இன்று(ஜூன் 5) பொறுப்பேற்றுக் கொண்டார். தொடக்கக்கல்வித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட கண்ணப்பனும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட தனியார் பள்ளிகள்.. அதிகாரிகள் போட்ட அதிரடி ஆணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.