ETV Bharat / state

மெரினாவில் உதவி ஆணையரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக பிரமுகர் - Arguing admk to Assistant Commissioner Marina

சென்னை: மெரினாவில் உதவி ஆணையரிடம் அதிமுக பிரமுகர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

உதவி ஆணையரிடம் அதிமுக பிரமுகர் வாக்குவாதம்

author img

By

Published : Jan 18, 2020, 6:17 PM IST

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், வாகன நெரிசலை தவிர்க்க கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் செல்ல இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் ஆறு மணி அளவில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் செல்வதற்காக அதிமுக கொடியுடன் கார் ஒன்றில் சிலர் வந்தனர்.

உதவி ஆணையரிடம் அதிமுக பிரமுகர் வாக்குவாதம்

அப்போது அவர்களுக்கு சர்வீஸ் சாலையில் அனுமதி அளிக்காததால், அதிமுகவினர் காவல் துறை உதவி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைப் பார்த்த பொதுமக்கள் தங்களது அலைபேசியில் அந்த காட்சியைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த காணொலியானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுகவினர் மீது திமுகவினர் புகார்

Intro:Body:*மெரினா கடற்கரையில் உதவி ஆணையரிடம் அதிமுக பிரமுகர் வாக்குவாதம செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது*

மெரினா கடற்கரையில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

காணும் பொங்கலை ஒட்டி ஏராளமான மக்கள் வருவதால் நேற்று கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டது

நேற்று மாலை சுமார் ஆறு மணி அளவில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் செல்வதற்காக அதிமுக கொடியுடன் வந்த காரில் உள்ள பிரமுகர்கள்

சர்வீஸ் சாலையில் தங்களது கார் அனுமதிக்கப்படாததை தொடர்ந்து காவல்துறை உதவி ஆணையரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளதுConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.