ETV Bharat / state

பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நிகழக் காரணம் என்ன தெரியுமா?

author img

By

Published : Oct 8, 2019, 7:43 PM IST

சென்னை: பழங்காலம் முதலே இந்திய-சீன நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி நடந்துவருகிறது என தொல்லியல்துறை நிபுணர் ராஜவேல் தெரிவித்துள்ளார்.

தொல்லியல்துறை நிபுணர் ராஜவேல்

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு தமிழ்நாட்டின் கடற்கரை நகரமான மாமல்லபுரம் பகுதியில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் மாபெரும் வரலாற்றுச் சுவடுகளை பண்டைய காலம் முதலே மாமல்லபுரம் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சிதான் இந்த சந்திப்பு. இதுகுறித்து விரிவாக விவரிக்கிறார் தொல்லியல் நிபுணரும் திருவாரூர் பல்கலைக்கழக பேராசிரியருமான ராஜவேல், " இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவுள்ளனர். இது, மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடக்கவுள்ளது. சங்க காலத்திலும், பல்லவர்கள், சோழர்கள் ஆகியோர் அங்கு ஆண்டபோதும் மாமல்லபுரம் முக்கியமான வரலாற்று நகரமாக இருந்துள்ளது. தென்னிந்தியாவிற்கு முக்கியமாக தமிழ்நாட்டிற்கு சீன அரசர்கள் வணிகர்களை அனுப்பினர். பல்லவ அரசர்களும் இதற்கு பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது. சீனா, தமிழ்நாட்டிற்கு இடையேயான உறவு குறித்து இலக்கிய மற்றும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எங்கள் காலத்தில் சீனப் பொருட்களை அதிகமாக வாங்கினோம்.

பழங்காலத்தில் இந்திய - சீன நாடுகளுக்கு இடையே இறக்குமதி, ஏற்றுமதி நடந்துள்ளது. இதேபோல்தான் மேற்கத்திய நாடுகளுடனும் வணிகம் நடந்தது. இந்திய வணிகர்களும் சீனாவிற்கு சென்று வணிகம் மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள முக்கிய நகரங்களில் அவர்கள் ஒரு சிலர் நிரந்தரமாக குடியேறினர். நரசிம்மவர்மன் காலத்தில் அவரின் செய்தித் தொடர்பாளரை அவர் சீனாவிற்கு அனுப்பினர். காஞ்சிபுரத்தை சீனர்கள் காஞ்சி என்றே அழைக்கின்றனர். பல்லவர்கள், சீனர்கள் ஆகியோருக்கு இடையே நல்ல உறவு இருந்தது வரலாற்றுச் சான்றுகள் மூலம் தெளிவாகிறது.

வணிகர்களான திசை ஐநூற்றுவர், மணிகிராமத்தார் ஆகியோர் சீனாவில் குடியேறியது கல்வெட்டுகள் மூலம் உறுதியாகிறது. இது சோழர்களின் காலத்திலும் தொடர்ந்தது. சங்க காலத்திலிருந்து மாமல்லபுரம் முக்கியப் பங்கை ஆற்றிவருகிறது. கடியலூர் உருத்திரங்கன்னாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலை நூலில் சீனப் பொருட்களை தொங்கு நாவாய் அல்லது தூங்கு கப்பல் என்ற குறிப்பால் சுட்டுகின்றனர். நம் பொருட்களும் அங்கு விற்கப்பட்டுள்ளது. பல்லவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களை சீன அரசர்கள் அனுப்பியுள்ளனர்.

சீன அரசர்களின் வேண்டுகோளை ஏற்று பல்லவர்கள் நாகப்பட்டினத்தில் புத்த கோயிலை கட்டினர். சோழர்கள் காலத்தில் அது பாதிப்படைந்தது. வால்டர் எலியட் 18ஆம் நூற்றாண்டில் இதனைக் கண்டறிந்தார். அதனை அவரே தான் வந்து சரிசெய்து கொடுத்தார். நாகப்பட்டினத்தில் உள்ள அந்த புத்தர் கோயிலில் பல்லவர்களும், சீனர்களும் புத்த வழிபாடுகளை கடைபிடித்துவருகின்றனர். சீனாவால் உற்பத்தி செய்யப்படும் பட்டு கிழக்கு கடற்கரை வழியாக மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

சீனர்களிடம் இருந்துதான் பட்டை எப்படி நெய்ய வேண்டும் என்பதை தமிழர்கள் கற்றுள்ளனர். எனவே, மோடி, ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெருகிறது. இந்த உறவு தொடர்ந்தால் தமிழர்கள் பெருமை அடைவார்கள். யுவான் சுவான் என்ற சீன யாத்திரிகர் கடற்பயணம் மேற்கொண்டு மாமல்லபுரத்திற்கு வந்தடைந்து பின்னர் காஞ்சிபுரத்திற்குச் சென்றார். எனவே, பல்லவர் காலத்தில் மாமல்லபுரம் முக்கிய துறைமுகம் என தெரிய வருகிறது. மாமல்லபுரத்தில் பல குகை கோயில்கள் உள்ளன. அது யுனேஸ்கோ நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல்துறை நிபுணர் ராஜவேல்

சங்க காலத்தில் கட்டப்பட்ட முருகன் கோயில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இது பழமையான நகரம் எனத் தெரியவருகிறது. சீனாவில் பல தமிழ் கல்வெட்டுகள், இந்து கோயில்கள் உள்ளன" என்றார்.

இதையும் படிங்க:

சாந்துப்பொட்டு, சந்தனப் பொட்டு - ரஃபேலுக்கு ஃபிரான்சில் ராஜ்நாத் சிங் பூஜை

Intro:

Body:சீனா மகாபலிபுரம் இடையேயான வர்த்தக உறவு குறித்த சிறப்பு செய்திக்கான நேர்காணல்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.