ETV Bharat / state

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி.. வாய் திறக்காத ஏ.ஆர்.ரகுமான்..! நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு கூறுவது என்ன?

AR Rahman Live Concert mess up: மறக்குமா நெஞ்சம், ஏஆர் ரகுமான் இசை கச்சேரியில் பங்கேற்ற ரசிகர்கள் முறையான வசதிகள் செய்யவில்லை என குற்றச்சாட்டியதை அடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.

AR Rahman Concert mess up
ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 12:04 PM IST

சென்னை: பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் "மறக்குமா நெஞ்சம்" என்ற பெயரில் Live In Concert நிகழ்ச்சி நேற்று (செப் 10) மாலை 7 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில் அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு மற்றும் பிளாட்டினம் என்று பல பிரத்யேக டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து டிக்கெட் வாங்கி வந்த ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் அதிருப்தி அடைந்தனர். இந்த நிகழ்ச்சிய காண வருபவர்களுக்காக சுமார் 20 ஆயிரம் இருக்கைகள் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாகவும், அதனால் உள்ளே செல்வோர் செல்ல முடியாமலும், டிக்கெட்டுக்கு ஏற்ற இடத்தில் அமர வைக்கப்படாமல் எங்கு வேண்டுமானலும் அமரும் நிலையிலும், சிலருக்கு இருக்கை இல்லாத நிலையும் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், குழந்தைகளை தவறவிட்டு சிலர் அவதியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிலர் டிக்கெட் வாங்கிவிட்டு இசை நிலழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பி சென்று விட்டனர். மொத்தத்தில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், இருக்கை வசதிகளும் இல்லாத மோசமான நிலை இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து உள்ளனர்.

டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக தற்போது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், இசையை ரசிக்க வந்த ரசிகர்கள் மிக மோசமான அனுபவத்தை பெற்றதாக சமூக வலைதளங்களில் விரக்த்தியை பகிர்ந்து உள்ளனர்.

மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஏற்கனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என எச்சரித்து இருந்ததாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

  • Grateful to Chennai and the legendary @arrahman Sir! The incredible response, the overwhelming crowd made our show a massive success. Those who couldn't attend on overcrowding, Our sincere apologies. We take full responsibility and accountable. We are with you. #MarakkumaNenjam

    — ACTC Events (@actcevents) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அதிகமான இடையூறுகளுக்கு ஆளானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளனர். இத்தைகைய சூழ்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் எதுவும் பேசவில்லை என்பது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “என் வாழ்க்கை கோலத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான்” - விஜய் சேதுபதி குறிப்பிட்ட பிரபலம் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.