ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்சாலையில் பயிற்சியுடன் புதிய பாடத்திட்டத்திற்கு அனுமதி

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் புதியப் பாடத்திட்டம் நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது எனவும், மாணவர்கள் 6 மாதம் தொழிற்சாலைகளில் பயிற்சி பெற பாடத்திட்டத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்

அண்ணா பல்கலைக் கழகத்தில் தொழிற்சாலையில் பயிற்சியுடன் புதிய பாடத்திட்டத்திற்கு அனுமதி

author img

By

Published : Aug 12, 2022, 7:14 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால், மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. தற்பொழுது தொழிற்சாலைகளில் பயிற்சி பெற்ற மாணவர்களைத்தேர்வு செய்து வருகின்றனர். எனவே பொறியியல் பட்டங்களைப்படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் வகையில் தொழிற்சாலைகளுடன் இணைந்து புதியப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்சாலையில் பயிற்சியுடன் புதிய பாடத்திட்டத்திற்கு அனுமதி

அந்தப் பாடத்திட்டதிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வியியல் குழு கூட்டத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் ஆலோசனை செய்து அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், “அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வியியல் குழுக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் மாணவர்களுக்கு தொழிற்சாலைக்குத்தேவைக்கு ஏற்ற பயிற்சி கொடுக்கப்படவில்லை. அதனை கொடுப்பதற்காக இந்த பாடத்திட்டத்தில் தொழில்துறை வல்லுநர்களின் கருத்துகளைப்பெற்று, அவர்கள் கூறுவது போல் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலத்தில் அவர்கள் தொழிற்சாலைக்குத்தேவையான திறனை பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பினை முடிக்கும்போதே பெற்றவர்களாக இருப்பார்கள்.

புதிய பாடத்திட்டத்தில் 5 பருவத்தில் இருந்து படிக்கும்போதே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 8ஆவது பருவத்தில் மாணவர்கள் தொழிற்சாலையில் இருந்து பயிற்சி பெறுவதற்கான முறையை செய்துள்ளோம். 3 மற்றும் 4ஆவது பருவத்தில் அடிப்படை பாடங்கள் தான் கற்பிக்கப்பட உள்ளன.

அதில் மாற்றம் செய்யப்படவில்லை. பெரிய மாற்றம் 5ஆவது பருவத்தில் இருந்து தான் தொடங்குகிறது. புதியப் பாடத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பாடத்திட்டம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படும்.

2 ஆண்டு மாணவர்களுக்கு புதியப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். ஏற்கெனவே முந்தைய பாடத்திட்டத்தில் படிக்கும் 3, 4ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் திறன்களை வளர்க்கும் வகையில் சில மாற்றங்களைக்கொண்டு வந்துள்ளோம்.

எல்லாத்துறைகளிலும் மாணவர்களின் திறன் அதிகரிக்கப்படுவதால், தன்னம்பிக்கை அதிகரித்து, வேலை வாய்ப்பும் பொறியியல் மாணவர்களுக்கு அதிகமாக இருக்கும். 8ஆம் பருவத்தில் மாணவர்கள் அவர்கள் இருக்கும் ஊரில் தொழிற்சாலை இருந்தால் பயிற்சிக்குச் செல்லலாம்.

மாணவர்களுக்குத் தொழிற்சாலை பயிற்சிக்கான வசதிகளையும் பல்கலைக்கழகம் ஏற்படுத்தித் தரும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிந்த பின்னர் தான் வகுப்புகள் தொடங்கப்படும். கலந்தாய்வு அக்டோபர் 15ஆம் தேதி முடிந்தப்பின்னர் வகுப்புகள் தொடங்கப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரமானது 439 பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான இடங்கள் விவரத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்குழுவிற்கு அளித்துள்ளோம்” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறோம் - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.