ETV Bharat / state

புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்கள் நியமன உத்தரவைத் தடை விதிக்கக் கோரி வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

author img

By

Published : May 20, 2021, 11:03 PM IST

புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்கள் நியமன உத்தரவை தடை விதிக்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தனர்.

3 பாஜக எம்எல்ஏக்கள் நியமன உத்தரவை தடை விதிக்கக் கோரி வழக்கு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 10ஆம் தேதி கரோனா பாதித்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், "புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களும் பதவி ஏற்காத நிலையில், 3 நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்க எந்த அவசரமும் இல்லை.

பதவியேற்கும் முன்பே, இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் தலைமைச் செயலர், துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது.

அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்.எல்.ஏ.-க்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்குப் பரிந்துரையை வழங்கும். ஆளுநர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படாததால், 3 நியமன எம்.எல்.ஏ.-க்கள் நியமனம் தொடர்பான உத்தரவைச் செல்லாது என அறிவித்து அதற்குத் தடை விதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டனர்.

அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என நியமன எம்எல்ஏக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.