சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இளங்கோவன் வெள்ளசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏழை மாணவர்கள் இளநிலைப் படிப்புகளில் பயன்பெறும் வகையில் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்பிற்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் www.unom.ac.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலை: தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படவுள்ள உதவிப் பேராசிரியர்கள்