கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை மாநாகராட்சி பல்வேறு ஊர்திகள் மூலம் கிருமி நாசினியை தெளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியில் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை, சென்னை மாநாகராட்சியுடன் இணைந்து அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பயன்படுத்தப்படும் உயிர் நீட்டிப்பு, ஏணி ஊர்தி (Brando Sky Lift) மூலம் கிருமி நாசினி தெளித்துள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணைய இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்துளார். அவர் பேசுகையில், ”இன்று அரசு மருத்துவமனையில், ஏணி ஊர்தி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்த ஏணி ஊர்தி பயன்படுத்தி எந்தந்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்க முடியுமோ அனைத்து இடங்களுக்கும் தெளிக்கப்படும். அதிகம் கூட்டம், கூடும் இடங்களில் வைரஸ் பரவக் கூடாது என்பதற்காக நாங்கள், முழு கட்டிடத்துக்கு கிருமி நாசினி தெளித்து உள்ளோம்“ என்றார்.
இதையும் படிங்க: கரோனா : சுமார் 7 லட்சம் பேரிடம் ஆய்வு