ETV Bharat / state

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் மற்றொரு மறுமுகம்.. ஆட்டத்தை ரசிக்க ஒரு கூட்டம், வாழ்வாதாரத்தை தேடி இன்னொரு கூட்டம்! - கிரிக்கெட் மைதானம்

Chepauk stadium: சென்னையில் இந்திய அணி வெற்றி பெற்ற போது, மைதானமே நீல வண்ணமாக இருந்ததும், இந்திய கொடிகள் அசைக்கப்பட்டதற்கு பின்னால் உழைக்கும் கைகளைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பைக் காணலாம்.

Chepauk stadium
'சென்னை சேப்பாக்கத்தின் மறுமுகம்'
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 5:39 PM IST

சென்னை: உலகக் கோப்பை 2023 இந்தியா அணிக்கான முதல் போட்டி நேற்று (அக்.8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதித்துள்ளது. நாம் அனைவரும், இந்திய அணிக்காக, வெற்றியை கொண்டாடினோம். சென்னை சேப்பாக்கம், மைதானமே நேற்று காலை முதல் இரவு வரை விழாக் கோலமாக இருந்தது.

இந்திய அணி டி சர்ட் விற்பனை
இந்திய அணி டி சர்ட் விற்பனை

ஆனால், அதே காலை முதல் மதியம் வரை, எத்தனையோ சிறுவர்கள் பள்ளி விடுமுறை தினம் என்பதால் தங்களது கையில் இந்திய கொடியை வைத்து விற்றுக் கொண்டு வந்தார்கள். சென்னை சேப்பாக்கம் மைதனாத்திற்கு வரும் வழியான வாலாஜா சாலையில் இருந்தே, சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் கையில், இந்திய ஜெர்சியை வைத்துக் கொண்டும், சிறுவர்கள் இந்திய கொடிகளை வைத்துக் கொண்டு, "அண்ணா ஒரு கொடி வாங்கிக்கங்க அண்ணா" என்ற கூறிக்கொண்டு விற்பனை செய்துக் கொண்டிருந்தார்கள்.

வாழ்வாதாரத்தை தேடி ஓடும் சிறுமி
வாழ்வாதாரத்தை தேடி ஓடும் சிறுமி

இதுகுறித்து ஈடிவி பாரத், செய்தியாளர் அவர்களிடம் பேச தொடங்கிய நிலையில், "எங்களுக்கு வீடு சிந்தாரிப்பேட்டை, திருவேலிக்கேணி, சிலர் சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து வந்துள்ளோம். எங்களுக்கு வியாபாரம் என்று நிலையானது எதுவும் இல்லை. கோயில் திருவிழா, சர்ச் திருவிழா, ரம்ஜான் ஆகிய தினங்களில், பலூன்கள், சிறு சிறு விளையாட்டு பொருட்கள் என்று விற்பனை செய்வோம்.சௌகார்பேட்டையில் இருக்கும் சிலர் எங்களிடம், இதுபோன்ற பொருட்களைக் கொடுத்து விற்பனை செய்ய சொல்வார்கள். அப்படி விற்பனை செய்தால் எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 வரை கிடைக்கும்" என்றனர்.

மைதானத்தின் வெளியே கொடியை விற்ற ஒரு சிறுவனிடம் கேட்டபோது, "அண்ணா, நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன். பட்டினப்பாக்கத்தில் இருக்கிறேன், அரசு பள்ளி தான், எங்க அப்பா, கிட்ட காசு வாங்கிட்டு வந்து, பிராட்வே-லே இருக்கிறே கடைகளிலே வாங்கிட்டு வந்து விற்கிறேன்.

ஒரு கொடி ரூ.20 வாங்கினேன், இங்க ரூ.50 விற்பனை செய்வோம். ஆனால், காலை 8 மணி முதலே விற்பனை செய்கிறேன். இது வரை யாரும் வாங்கவில்லை. அதோ, என் நண்பன் சூப்பரா வரைவான், ரசிகர்கள் முகத்தில், இந்தியா கொடி, ஆஸ்திரேலியா கொடி அழகாக வரைவான். அவனுக்கே, காலையிலே இருந்து 3 பேர் தான் வந்தாங்க" என்று கூறிக் கொண்டு சென்றான் அச்சிறுவன்.

வாழ்வாதாரத்தை தேடி ஓடும் சிறுவன்
வாழ்வாதாரத்தை தேடி ஓடும் சிறுவன்

தொடர்ந்து நடைபாதை கடையில், இந்திய டீம் ஜெர்சிகளை விற்பனை செய்யும் ஒரு பெண்ணிடம் கேட்டப்போது, "எங்களுக்கு வியாபாரம் என்பது, இன்று ஒரு நாள் தான். மற்ற படி, நாங்கள் கட்டிட வேலைக்கு செல்வோம். இல்லையென்றால், சில சமயம் கடற்கரையில், உணவு பண்டங்களையும் விற்பனை செய்வோம். இந்த ஜெர்சியின் விலை 250 தான்.

ஆனால் 10 ஆயிரம், 20 ஆயிரம் என டிக்கெட் வாங்கும் இவர்களால் இந்த ஜெர்சியை வாங்க முடியவில்லை. இந்த முறை மேட்ச் பார்க்க வந்தவர்கள் அதிகமாக வட இந்தியர்கள். அவர்கள், இந்தி பேசுபவர்களிடம் மட்டும் தான் வாங்குகிறார்கள்" என்று கூறிக்கொண்டும் இருக்கும் நேரத்தில், வாடிக்கையாளர் ஒருவர் பேரம் பேச தொடங்கினார்.

வாழ்வாதாரத்தை தேடி ஓடும் பெண்
வாழ்வாதாரத்தை தேடி ஓடும் பெண்

பின்னர் ஒரு சிறுவனை கேட்டப்போது, "கூட்டத்தில் இருப்பவர்கள் எங்களை கூப்பிடுவார்கள். நாங்களும், வியாபாரம் ஆகும் என்று செல்வோம். உடனே பள்ளிக்குச் செல்கிறாயா? இல்லையா-னு கேப்பாங்க. நாங்க ஸ்கூலுகு போவோம், இது முழு நேரமாக செய்வது இல்லை, விடுமுறை தினத்தில் மட்டும் தான் என்று சொல்லுவேன். தொடர்ந்து 10 - 20 நிமிடம் பேசிவிட்டு ரேட் அதிககமாக இருக்குன்னு சொல்லிட்டு வாங்கமா போவாங்க" என்று சென்னை வட்டார மொழியில் தெரிவித்து சென்றான். சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் மைதானங்களை மட்டுமல்ல சில காலியான வயிறுகளையும் நிறைத்துவிட்டுதான் செல்கின்றன.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு! 107 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம்! கடைசி நாளில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.