ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

author img

By

Published : May 30, 2022, 9:41 PM IST

தமிழ்நாட்டில் 89 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலூம் 67 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரியில் 67 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், அங்கு தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் ஜூன் 30ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 12,824 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 89 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 54 லட்சத்து 36 ஆயிரத்து 677 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 34 லட்சத்து 55 ஆயிரத்து 376 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 493 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 44 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 858 என உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மாதத்திற்கு மேல் பதிவாகாமல் உள்ளதால், 38 ஆயிரத்து 25 என இறப்பு எண்ணிக்கை நீடித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 46 நபர்களுக்கும், சென்னை மாவட்டத்தில் 33 நபர்களுக்கும், கோயம்புத்தூர் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும்; திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் தலா ஒரு நபர் என 89 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 29ஆம் தேதி 1,216 நபர்களுக்கு பரிசோதனை செய்த பொழுது 30 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மாநிலத்திலேயே அதிக அளவாக 2.5% என பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2011 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 32 பேருக்கு நோய்த் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு எண்ணிக்கை 1.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் பரிசோதனை செய்பவர்களில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 0.5 என உள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.